1996- 2012ம் ஆண்டு பிறந்தவர்களா நீங்கள்? ஏன் சீக்கிரம் முடி நரைக்கிறது, தோல் சுருங்குகிறது தெரியுமா?
டெல்லி: 1996ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பிறந்தவர்களுக்கு இளமை காலத்திலேயே முதுமை காலத் தோற்றம் ஏற்படுவது ஏன் ? என்பது குறித்து மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஜென் இசட் அல்லது ஜென் சி எனப்படுவோர் 1996ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பிறந்தவர்கள். 1996ஆம் ஆண்டு முன்பு பிறந்தவர்கள் மில்லினியல் என அழைக்கிறோம்.

இதுகுறித்து தோல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரியா சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்த காலத்தில் முதிர்ச்சியான தோற்றம் பெரும்பாலானோருக்கு இளம் வயதிலேயே வருகிறது. தோலை பொருத்தவரையில் 30 வயதிற்கு மேல் வயதான தோற்றம் ஏற்பட தொடங்கும்.
ஆனால் இப்போதெல்லாம் 15 வயது முதலே வயதான தோற்றம் தொடங்குகிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா? இதற்கு external factors and internal factors இருக்கிறது. external factors எனச் சொல்லும் போது சூரிய ஒளி, காற்று மாசு, தண்ணீர், கணினியில் பணியாற்றுவது, செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவது ஆகியவற்றின் மூலம் புற ஊதா கதிர்கள், வெளிச்சம் உள்ளிட்டவைகளால்கூட வயதான தோற்றம் ஏற்படும்.
இது தவிர்த்து புகைப்பிடித்தல், மது அருந்துதல், இ சிகரெட் போன்றவற்றாலும் சீக்கிரம் தோல் வயதான தோற்றத்திற்கு மாறும். இவை புற்றுநோயை உண்டாக்கும், நுரையீரலையும் தோலையும் பாதிக்கும். முன்பு போல் உணவு பழக்கவழக்கம் இப்போது இல்லை. ரெடிமேடாக கிடைப்பதை வாங்கி சமைத்து சாப்பிடுகிறார்கள்.
அதிலும் உணவு டெலிவரி வந்ததும் இன்னும் மோசம். சமைக்கும் நேரத்தை கூட மிச்சப்படுத்தி வெளி உணவை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனால் தோலில் பாதிப்பு ஏற்படுவது போல் உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படும். ஆனால் நமக்கு வெளியே தெரியாது. தற்போது தோலில் தடிமன்கள், இளநரை, கரும்புள்ளிகள் உள்ளிட்டவை தற்போது முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.
சொரியாசிஸ் ஏற்படவும் வாய்ப்புண்டு. இதெல்லாம் மன அழுத்தம் காரணமாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது. முடி கொட்டுதல், இளமையிலேயே முதுமை தோற்றம் உள்ளிட்டவை எல்லாம் ஏற்பட காரணம் ஸ்ட்ரெஸ்தான். உடல் உழைப்பு இல்லை, உட்கார்ந்தபடியே ஏதோ ஒரு வேலை செய்கிறார்கள்.
கணினி முன் உட்கார்ந்தாலே கண் பாதிக்கும், உடல் பாகங்களில் உள்ள தோல் உலர்ந்த நிலை அடையும். மாதவிடாய் காலத்தில் உதிரப் போக்கால் பெண்களுக்கு அதிக ரத்த சோகை நோய் இருந்ததை பார்த்துள்ளோம். ஆனால் இன்று பருவமடையாதவர்கள் கூட ரத்த சோகையால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு போஷாக்கு கிடைப்பதில்லை,. ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை. நிறைய பேர் இரவு 2, 3 மணி வரை எல்லாம் விழித்துக் கொண்டு வேலை செய்கிறார்கள், இதனால் அவர்களுடைய தூக்கத்தின் பேட்டர்னே மாறிவிடுகிறது. சனி, ஞாயிறுகளில் கூட வீட்டில் இல்லாமல் வெளியே போய் சாப்பிடுவது தாமதமாக வீட்டுக்கு வருவது போன்றவைகளும் பிரச்சினையை ஏற்படுத்தும்.
நிறைய பேர் தண்ணீர் சரியாக குடிப்பதில்லை, வெளியே இருப்பவர்கள் கழிவறை சரியில்லாததால் சிறுநீர் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றாமல் அடக்குவது போன்றவற்றைதான் கல்லூரி மாணவர்களும் பள்ளி மாணவர்களும் செய்கிறார்கள்.
இதனால் அவர்களுக்கு மலச்சிக்கல், முகப்பரு உள்ளிட்டவை ஏற்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications