மிஸ் வேர்ல்ட் விளையாட்டு சவால்... இந்திய அழகி தோல்வி!

Subscribe to Oneindia Tamil

பாலி: இந்தோனேசியாவில் தொடங்கியுள்ள மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியின் முதல் போட்டியில் இந்திய அழகி நவ்னீத் கெளர் தில்லான் தோல்வியடைந்துள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் மிஸ் வேர்ல்ட் 2013 அழகிப் போட்டி தொடங்கியுள்ளது.

கண்கவர் தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து அழகிகளுக்கான விளையாட்டு சவால் போட்டி நடந்தது. இதில் 116 பேர் கலந்து கொண்டனர். அவர்களிலிருந்து 16 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இதில் இந்திய அழகி நவ்னீத் கெளர் தில்லான் இடம்பெறவில்லை.

மிஸ் வேர்ல்ட் 2013

மிஸ் வேர்ல்ட் 2013

மிஸ் வேர்ல்ட் 2013 அழகிப் போட்டி இந்தோனேசியாவின் பாலி தீவில் தொடங்கியுள்ளது.

முதல் போட்டியில் தில்லான் அவுட்

முதல் போட்டியில் தில்லான் அவுட்

முதலில் அழகிகளுக்கான விளையாட்டு சவால் நடந்தது. இதில் 116 பேர் கலந்து கொண்டனர். இதில் இந்திய அழகி நவ்னீத் கெளரும் கலந்து கொண்டார். ஆனால் தோல்வியைத் தழுவினார்.

நான்கு நான்காக பிரித்து

நான்கு நான்காக பிரித்து

மொத்த அழகிகளையும் நான்கு அணிகளாக பிரித்து போட்டியை நடத்தினர். ஒவ்வொரு விளையாட்டுக்கும் 30 விநாடிகள் அழகிகளுக்கு தரப்பட்டது. பவுலிங் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றன.

ஒவ்வொரு அணியிலும் 4 பேர் தேர்வு

ஒவ்வொரு அணியிலும் 4 பேர் தேர்வு

கடைசியில் ஒவ்வொரு அணியிலிருந்தும் நான்கு பேர் தேர்வானார்கள். இவர்கள் இன்று நடக்கும் இறுதிச் சுற்றில் பங்கேற்பார்கள்.

ரிசர்வாக 4 பேர்

ரிசர்வாக 4 பேர்

இவர்கள் போக ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒரு அழகி ரிசர்வ் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டனர். 16 அழகிகளில் யாராவது இறுதிச் சுற்றில் பங்கேற்க முடியாமல் போனால் இவர்கள் பங்கேற்பார்கள்.

யார் அந்த 16 பேர்

யார் அந்த 16 பேர்

மிஸ் பெல்ஜியம் நவோமி ஹப்பர்ட், மிஸ் ஹங்கேரி அன்னாமரியா ராகோசி, மிஸ் வடக்கு அயர்லாந்து மீகன் கிரீன், மிஸ் ஸ்காட்லாந்து ஜேமி போவர்ஸ், மிஸ் டொமினிக்கன் பெர்னாட் ஜோலி, மிஸ் எல் சால்வடார் பாலோ அயலா, மிஸ் மான்டிநீக்ரோ இவானா மிலஜோகா, மிஸ் ஸ்பெயின் எலினா எபார்பியா ஜிம்னஸ், மிஸ் இத்தாலி சாரா படெர்னா, மிஸ் நெதர்லாந்து ஜாக்குலின் ஸ்டீன்பீக், மிஸ் நிகாரகுவா லஸ் மேரி டெசனா, மிஸ் ஸ்லோவேகியா கரோலினா சோமிஸ்டெகவா, மிஸ் இங்கிலாந்து கிறிஸ்டி ரோஸ் ஹெசல்வுட், மிஸ் நியூசிலாந்து எல்லா லிலியான் லாங்க்ஸ்போர்ட், மிஸ் பனாமா விர்ஜீனியா ஹெர்னாண்டஸ், மிஸ் பராகுவே கோரல் ரூயிஸ் ரேயஸ்.

ரிசர்வ் அழகிகள

ரிசர்வ் அழகிகள

மிஸ் அருபா, மிஸ் சைப்ரஸ், மிஸ் பல்கேரியா மற்றும் மிஸ் பெரு ஆகியோர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+