நாட்டில் முதன்முறை.. என்.டி.ஏ தேர்வுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அறிவிப்பு..முழு விவரம்
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு(என்.டி.ஏ) பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ராணுவம், கடல் மற்றும் விமானப் படைகளில், வீரர்களுக்கான நிரந்தர பணியில் சேர, என்.டி.ஏ., எனப்படும் தேசிய ராணுவ அகாடமி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, ஆண்டுக்கு இருமுறை நடைபெறுகிறது.

நீண்ட கால கோரிக்கை
மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் இந்த தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு எழுத ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. பெண்கள் எழுத முடியாது. பல்வேறு துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் போட்டி கொடுக்கும் இந்த காலத்தில் பாதுகாப்புப் படையில் பெண்களுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் பாதுகாப்புப் படையில் பெண்களுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும். தேசிய ராணுவ அகாடமி தேர்வில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

கண்டிப்பு
இதற்கு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு. 'என்டிஏ நுழைவுத் தேர்வில் பெண்கள் பங்கேற்க அடுத்த ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிடப்படும்' என்று கூறியது. ஆனால் இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த ஆண்டே தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.

வெளியானது அறிவிப்பு
இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இந்தியாவில் முதன்முறையாக தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வில்(II) பெண்கள் பங்கேற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் திருமணமாகாத பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள்
தகுதியும், திறமையும் வாய்ந்த பெண்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 08.10.2021 ஆகும். மேலும் விவரங்களை www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த அறிவிப்பினால் இளம் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications