Accenture நிறுவனத்தில் குவிந்திருக்கும் வேலை.. சென்னை - கோவை உள்பட 12 இடங்களில் பணி.. ஜன., 9 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம் நாட்டில் முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக அக்சென்ச்சர் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஜனவரி 9 ம் தேதி நள்ளிரவு 11.55 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 12 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அக்சென்ச்சர் (Accenture) ஐடி நிறுவனத்தில் தற்போது அசோசியேட் சாப்ட்வேர் இன்ஜினியர் (Associate Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it jobs job accenture

இந்த பணிக்கு 0 முதல் 1 ஆண்டு 11 மாதம் பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி முன்அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

பணி அனுபவம் இல்லாதவர்கள் கல்லூரிகளில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். 2025ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்ஏ, எம்டெக் என எந்த படிப்பை முடித்திருந்தாலும் விண்ணப்பம் செய்யலாம்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாத சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 9 ம் தேதியாகும். அன்று இரவு 11.55 மணிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பம் செய்வோருக்கு இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் உள்ளிட்டவை பற்றி அறிவிக்கப்படும். இண்டர்வியூவில் தேர்வாகும் நபர்கள் 12 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை, கோவையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதவிர பெங்களூர், புனே, மும்பை, நாக்பூர், குர்கிராம், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர், ஹைதராபாத், அகமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+