ரயில்வேயில் வேலை.. 1,113 பணியிடங்கள்.. ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. செம சான்ஸ்!
சென்னை: தென்கிழக்கு ரயில்வேயில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிர்பபுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,113 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்ன என்பனவற்றை இங்கே பார்க்கலாம்.
தென்கிழக்கு ரயில்வேயில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ கல்வி தகுதி கொண்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பல்வேறு தூறைகளில் மொத்தம் 1,113 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
* வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்) -161 பணியிடங்கள்
* டர்னர் - 54
* ஃபிட்டர் - 207
* எலக்ட்ரீஷியன் - 212
* ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்) - 15
* ஸ்டெனோகிராபர் (இந்தி) - 08
* கணினி இயக்குபவர் / நிரல் உதவியாளர் - 10
* சுகாதாரம் மற்றும் சுகாதார ஆய்வாளர் - 25
* மெஷினிஸ்ட் - 15
* மெக்கானிக்கல் டீசல் - 81
* மெக்கானிக்கல் ரெஃப்ரிக் & ஏர் கண்டிஷனர் - 21
* மெக்கானிக் ஆட்டோ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் - 35
ரூ.40,000 முதல் ரூ.1.40 லட்சம் வரை மாத சம்பளம்! இசிஐஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. மிஸ் பண்ணாதீங்க
என 844 பணியிடங்கள் ராய்பூர் DRM அலுவலகத்தில் நிரப்பப்படுகின்றன. ராய்ப்பூரில் உள்ள வேகன் பழுதுபார்க்கும் பிரிவில் 269 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் 1,113 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித்தகுதி என்ன?: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். பணியிடங்களுக்கு ஏற்ப துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 15 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயது முடிந்தவர்கள் விண்ணபிக்க முடியாது. எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொது பிரிவில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு. எஸ்.சி/ எஸ்டி பிரிவில் வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: மெரிட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பிக்க அவகாசம் 02.04.2024 அன்று தொடங்குகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 01. 05. 2024 கடைசி நாள் ஆகும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ரயில்வே வாரிய விதிகளின் படி ஊதியம் அளிக்கப்படும். விண்ணப்பாதரர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பை படிக்க https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications