பொதுத்துறை வங்கியில் வேலை.. மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம்! யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்?
சென்னை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் (bank job) ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர், தலைமை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 349 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தது ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை கீழே பார்க்கலாம்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா உள்ளது. 1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி 1944 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட வங்கியாக மாறியது. 1969 ஆம் ஆண்டு நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட 14 வங்கிகளில் இதுவும் ஒன்றாகும். மகாராஷ்டிர மாநிலம் புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன.

பணியிடங்கள் விவரம்:
இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 349 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர், தலைமை மேலாளர் - டிஜிட்டல் பேங்கிங், டேட்டா அனலிஸ்ட், ஐடி செக்யூரிட்டி, பிசினஸ் அனலிஸ்ட், ஜாவா டெவலப்பர், டிஜிட்டல் சேனல், ஐடி இன்பிராஸ்ட்ரக்சர், மொபைல் ஆப் டெவலப்பர் என மேலாளர் பதவிகளில் மொத்தம் 41 வகையான பதவிகளில் 349 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி என்ன
கல்வித் தகுதியை பொறுத்தவரை பணியின் தன்மைக்கேற்ப மாறுபாடும். B.E/B.Tech, MBA, MCA, M.Sc உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி அனுபவமும் கோரப்பட்டுள்ளது. கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் கீழ்க்கண்ட தேர்வு அறிவிப்பில் படித்து உறுதி செய்து கொள்ளலாம். பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது.
சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக மாதம் ரூ.1,40,500 முதல் ரூ. 1,56,500/- வரை கிடைக்கும். தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வு, டிஸ்கஷனுக்கு பிறகு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். SC/ST, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.118 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியும். விண்ணப்பிக்க வரும் 30.09.2025 கடைசி நாளாகும். தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/34e5d288-8ca4-400f-b7af-60fe7a44d286.pdf
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications