ஐடிஐ, டிப்ளமோ முடித்திருந்தால் போதும்.. பிஎஸ்எப்-இல் சூப்பர் ஜாப்.. 1.17 லட்சம் வரை சம்பளம்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் எல்லை பாதுகாப்பு படை பிரிவில் காலியாக உள்ள 37 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்ன என்பன குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் என மொத்தம் 37 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்: சப் இன்ஸ்பெக்டர் (வாகன மெக்கானிக்) - 03 பணியிடம்
கான்ஸ்டபிள்- 34 பணியிடம் என மொத்தம் 37 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கான்ஸ்டபிள் பணியிடத்தை பொறுத்தவரை பிட்டர், கார்பெண்டர், ஆட்டோ எலக்ட்ரிக், வாகன மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறர்கள். இது குறித்த விவரங்களை தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: சப் இன்ஸ்பெக்டர் Vehicle Mechanic- பணிக்கு மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ அல்லது ஆட்டோ மொபைல் இன்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பு அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க் படித்து இருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பணிகளுக்கு துறை சார்ந்த பிரிவில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து இருப்பது அவசியம். அல்லது சம்பந்தப்பட்ட துறையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு & சம்பளம்: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கான்ஸ்டபிள் பணிக்கு 18 முதல் 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. சம்பளத்தை பொறுத்தவரை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு மாதம் ரூ.35,400 - 1,12,400- வரை சம்பளமாக கிடைக்கும். கான்ஸ்டபிள் பணிக்கு ரூ.21700 – 69100 வரை கிடைக்கும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரகள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.247.20 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி / எஸ்டி உள்ளிட்டோருக்கு கட்டணம் கிடையாது.
கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.147.20 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 17.06.2024 கடைசி நாள் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் அறிவிப்பினை படிக்க https://rectt.bsf.gov.in/#bsf-current-openings இந்த இணையதளத்தை சென்று பார்வையிடவும்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications