Canara Bank: கனரா வங்கியில் வேலை.. 3,500 காலிப்பணியிடங்கள்! தமிழ் தெரிந்தால் முன்னுரிமை.. தூள் கிளப்புங்க
சென்னை: பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் (Canara Bank Job Recruitment) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,500 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 394 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருப்பது கனரா வங்கி. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படுகின்றன.

ஐபிபிஎஸ் வாயிலாகவும், நேரடியாகவும் இந்த பணியிடங்களை கனரா வங்கி நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
மொத்தம் 3,500 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 394 காலியிடங்களும் கேரளாவில் 243 காலியிடங்களும் கர்நாடகாவில் 591 பணியிடங்களும் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம். தமிழகத்தை சேர்ந்தவர்கள் பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம். விண்ணப்பதாரர்கள் 01.01.2022 ஆம் ஆண்டுக்கு முன்பாகவோ 01.09.2025 க்கு பிறகோ டிகிரி முடித்தவர்களாக இருக்க கூடாது.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவர்களும் அதிகபட்சம் 28 வயது பூர்த்தி அடையாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 01.09.1997 க்கு முன்போ 01.09.2005 க்கு பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது.
அரசு விதிமுறைகளை பின்பற்றி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 15 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்டி/எஸ்சி பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் https://canarabank.bank.in/
என்ற இணையதளத்தில் உள்ள தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்வது அவசியம். அதன்பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 12.10.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://canarabank.bank.in/UploadedFiles/Pdf/NOTIFICATION-%20APP-22.pdf
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications