மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கொட்டி கிடக்கும் வேலைகள்.. மாதம் 81,100 வரை சம்பளம்
டெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் எழுத்தர், அஞ்சல் உதவியாளர், தரவு நுழைவு ஆப்ரேட்டர் உள்பட காலியாக உள்ள 4,726 பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு படித்த தகுதியானர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2020 ஆகும். தட்டச்சு படித்து பணி அனுபம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்தர், அஞ்சல் உதவியாளர், தரவு நுழைவு ஆப்ரேட்டர் உள்பட காலியாக உள்ள 4,726 பணியிடங்கள்

வேலை தரும் நிறுவனம்: மத்திய அரசு
வேலைகள் லோவர் டிவிசன் கிளர்க் (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
ஊதியம்: மாதம் ரூ. 19,900-63,200
வேலைகள்: Postal Assistant/ Sorting Assistant
கல்வி தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வேலைகள் : டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (DEO)
பணி: டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் Grade 'A'
ஊதியம்: மாதம் ரூ.25,500-81,100
கல்வி தகுதி: அறிவியல் மற்றும் கணித பாடப்பிரிவுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2021 தேதியின்படி 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு முறை: இரண்டு கட்ட தேர்வு மற்றும் திறன் தேர்வு, தட்டச்சு தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2020
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications