தமிழ் தெரிந்தாலே ரூ.50000 வரை சம்பளம்.. தமிழக அரசு வேலை.. விண்ணப்பிக்கலாம் வாங்க
தென்காசி : திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 33 (ஆண்-25, பெண்-8) சமையலர் பணியிடங்கள் 15700-50000 என்ற ஊதிய பிணைப்பில் ரூ.15,700/- ஊதியத்திலும் மற்றும் 4 (ஆண்-2, பெண்-2) பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்கள் ரூ.3000/- தொகுப்பூதியத்திலும் பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

• விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
• சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்.
• 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
• திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
தகுதியான நபர்கள் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல்மூலமாகவோ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 12.01.2021 -க்குள் விண்ணப்பித்திட வேண்டும் என தனது அறிக்கையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications