மாதம் 14,000 உதவித் தொகையுடன் பயிற்சி.. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு! நாளைதான் கடைசி
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.14 ஆயிரம் உதவித் தொகையுடன் பயிற்சியும் அளிக்கப்படும். இதற்கான சிறப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு பல்லாவரத்தில் நடைபெறுகிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் வாயிலாக தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் நிறுத்தி வைக்கவும், பராமரிக்கவும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் டெப்போக்கள் உள்ளன. சென்னை அடையாறு, சைதாப்பேட்டை, திருவான்மியூர், தாம்பரம் என நகரின் பல பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான டெப்போக்கள் உள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை டிரைவர், நடத்துனர் பணியாளர்கள் மட்டும் இன்றி டெக்னிக்கல் பணிகளுக்காகவும் பல ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பேருந்துகளை பழுதுபார்த்தால் உள்ளிட்ட பணிகளை இந்த ஊழியர்கள் செய்கிறார்கள். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அவ்வப்போது ஐடிஐ முடித்த இளைஞர்ளுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சியும் வழங்குகிறது.
அந்த வகையில், ஐடிஐ பயிற்சி பழகுநர் பணிக்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இதற்கான முகாம் நாளை காலை நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், 2025-2026-ஆம் ஆண்டிற்கு மாதம் ரூ.14,000/- உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 02.04.2025 அன்று மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு மூகாமில் விண்ணப்பிக்கலாம்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான ITI-பிரிவுகளில் (Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Electrician, Auto Electrician, Fitter, Turner, Painter & Welder) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000/- உதவித் தொகையுடன் ITI-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 02.04.2025 அன்று காலை 10:00 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு மூகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
இந்த முகாமில் தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் நாளை நடைபெறும் இந்த தேர்வு முகாமில் தேவையான சான்றுகளுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில், பயிற்சி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications