Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஓஎஸ்சி சேவை மையத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்! சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பன்முக உதவியாளர், பாதுகாப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

job chennai employment

இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதியம் / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மைய நிர்வாகி (காலிப்பணியிடங்கள் 5)

சமூகப் பணியில் முதுகலை (Master's Degree in Social Work / Psychology) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.35,000/- ஆகும்.
பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

மூத்த ஆலோசகர் (5)

M.S.W (Master's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். அல்லது ஆலோசனை உளவியலில் M.Sc (Counselling Psychology) குறைந்தபட்ச இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட, பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து காக்கும் அரசு அல்லது அரசு சாராத திட்டங்களுடன் ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். (அல்லது) ஒரு வருட கால அனுபவத்தில், அதே அமைப்புக்குள்ளேயே அல்லது அதற்கு வெளியே பணிபுரிந்திருக்க வேண்டும்.

பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.22,000/- ஆகும். பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

தகவல் தொழில்நுட்ப பணியாளர் (5)

இளங்கலை பட்டப்படிப்பு (B.Tech., B.Sc) மற்றும் Diploma in Computers/IT மற்றும் தர மேலாண்மையியல் (Data Management), செயல்முறை ஆவணங்கள் தயாரிப்பு (Process Documentation), வலை அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்கள் (Web based reporting formats)-ல் மாநில / மாவட்ட / தன்னார்வ தொண்டு நிறுவனம் இவைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் தேவை. உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம் ரூ.20,000/- ஆகும். பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

வழக்கு பணியாளர்கள் (30)

சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

வயது 35-க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.18,000/- ஆகும். பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

பாதுகாப்பாளர் (10)

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.12,000/- ஆகும்.
பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

பன்முக உதவியாளர் (10)

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் மற்றும் அலுவலகத்தை பராமரிக்க தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

பணியிடங்கள்: நொச்சிக்குப்பம், எழில் நகர், சோழிங்கநல்லூர், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி

விரும்பும் பதவிகளுக்கு https://chennai.nic.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் 21.11.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை,
இராஜாஜி சாலை, சென்னை-01

என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+