சென்னை பரங்கிமலை காசி விஸ்வநாதர் கோயிலில் வேலை.. தமிழில் எழுத படிக்க தெரியுமா? 50 ஆயிரம் சம்பளம்!
சென்னை: சென்னை பரங்கிமலை காசி விஸ்வநாதர் கோயிலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன ஆகிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நிர்வாக ரீதியாக உள்ள பணியிடங்கள் உள்ளிட்டவற்றை நிரப்பும் பணிகளையும் அறநிலையத்துறை மேற்கொள்கிறது.

அந்த வகையில், சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயிலின் உப கோயிலான அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* எழுத்தர்: 1 பணியிடம்
* காவல்: 1 பணியிடம்
என மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
* கல்வித் தகுதியை பொறுத்தவரை எழுத்தர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும். * காவல் பணிக்கு தமிழில் எழுதவும் படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 08.12.2025 அன்று தேதிப்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை எழுத்தர் பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். காவல் பணிக்கு ரூ.11,600 முதல் 36,800 வரை சம்பளமாக வழங்கப்படும்.
பிற விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களுக்குச் சான்றிட்ட ஒளிப்படிகளை (Xerox) மட்டுமே அனுப்பப்பட வேண்டும். அசல் சான்றிதழ்களை எக்காரணத்தினை முன்னிட்டும் அனுப்பக்கூடாது. அசல் சான்றிதழ்களை நேர்முகத்தேர்வின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் உடல்தகுதிச் சான்று பெற்று அதன் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பணியிடங்களுக்கும் கூடுதலாகக் காவல்துறை சான்றிதழும் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கூடுதல் தகுதி என்பது இத்திருக்கோயிலில் காலகாலமாகப் பின்பற்றிப் பணியாற்றி வந்த விவரங்களின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்து மதத்தினைச் சார்ந்தவர்களிடமிருந்து 10.12.2025 முதல் 09.01.2026 வரை அலுவலக நாட்களில் காலை 10.10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவு அஞ்சலில் ஒப்புதல் அட்டையுடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்குப் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. மேலும், தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். பூர்த்தி செய்து திருக்கோயிலுக்கு வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அறிவிப்பு அனுப்பப்படும்.
பிற நிபந்தனைகள்
விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை Vadapalaniandavar.hrce.in.gov.in, hrce.tn.gov.in பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை-600 028' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 09.01.2024 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக கொள்ளப்படும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: Click Here
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications