மிஸ் பண்ணிடாதீங்க.. சென்னையில் உள்ள தபால் அலுவலகத்தில் அருமையான வேலைவாய்ப்பு
சென்னை : சென்னையில் உள்ள தபால்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார் டிரைவர் மற்றும் திறன் சார் பணியாளர்கள் ( skilled artisans) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
பெயிண்டர், டயர்மேன், மெக்கானிக் எலக்ட்ரீசியன், பழுது நீக்குபவர் (copper & tinsmith) உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. இதேபோல் 25 டிரைவர் பணியிடங்கள் உள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: 18 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், (01.07.2020ன்படி)
ஊதிய விவரம்: 19900- 63200 மற்றும் கூடுதல் படிகள்

கல்வி தகுதி
பெயிண்டர், டயர்மேன், மெக்கானிக் எலக்ட்ரீசின், பழுது நீக்குபவர் உள்பட அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து பணியிடங்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ நிறுவனங்களில் அல்லது அரசு நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும். அப்படி படிக்காதவர்கள் என்றால் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று குறைந்த பட்சம் ஒரு வருடம் பணி அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை
தேர்வு முறை: தேர்வு செய்யப்படும் முறை என்பது குறிப்பிட்ட பிரிவுகளில் அவர்களின் திறன் எப்படி என்பது குறித்து தேர்வு வைத்து தேர்வு செய்யப்படுவார்கள்.
வயது வரம்பில் அரசு சலுகையும் உண்டு. எஸ்சி, எஸ்சி பிரிவினருக்கு 5 வருடம் சலுகை
ஓபிசி பிரிவினருக்கு 3 வருடம் வரை வயது சலுகை உண்டு அதாவது கடந்த ஜூலை 2020 நிலவரப்படி அவர்கள் 35 அல்லது 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை
விண்ணப்ப படிவத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உங்கள் சுய விவரத்தை எழுத வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் பதவியை குறிப்பிட வேண்டும்.. அத்துடன் உங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை அதில் ஒட்டி, அட்டஸ்ட் அதிகாரியிடம் அட்டஸ்ட் பெற வேண்டும். அத்துடன் 8ம் வகுப்பு மற்றும் ஒரு வருட அனுபவ சான்றிதழ் அல்லது ஐடிஐ படித்த சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் உள்பட உங்கள் கல்வி சான்றிதழ்களின் நகலை இணைத்து ஸ்பீட் போஸ்டில் மட்டுமே சென்னை முகவரிக்கு அனுப்ப வேண்டும். ரூ.100 கட்டணத்தையும் போஸ்ட் ஆபிசில் செலுத்த வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய சென்னை முகவரி:
the senior manager, mail motor service, mo 37 (old no16/1) greams road chennai 600006 என்ற முகவரிக்கு வரும் ஜுன் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் ஸ்பீட் போஸ்டில் மட்டுமே அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

கவனிக்க வேண்டிய அம்சம்
இதேபோல் எந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அதை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.. அதாவது application for the post ---------------- in mail motor service, chennai 600 006 என்பதில் மெக்கானிக்கா அல்லது எந்த பதவி என்பதை குறிப்பிட வேண்டும். இதை குறிப்பிடாவிட்டாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
டிரைவர் பணியிடம்
இதற்கிடையே தபால் துறை அலுவலகத்தில் டிரைவர் பணிக்கும் ஆள் தேவைப்படுகிறது. மொத்தம் 25 காலிபணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் 10.6.2021 க்கு முன்பு விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் உங்கள் பெயர் உள்ளிட்ட கேட்டுள்ள விவரங்களை சரியாக நிரப்பி சென்னை முகவரிக்கு அனுப்பி வையுங்கள். மேலே சொன்ன பதவிகளுக்கு உரிய நிபந்தனைகள் இப்பதிவுக்கும் பொருந்தும். விண்ணப்பம் எல்லா பொறுப்புக்கும் ஒன்று தான். இச்செய்தியுடன் வரும் பிடிஎப்பில் விண்ணப்பம் இணைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications