சூப்பர் குட் பிலிம்ஸ்: ஹிட் அடித்த பல படங்களை தயாரித்தவர்.. ஜீவாவின் தந்தை! யார் இந்த ஆர்பி சவுத்ரி?
சென்னை: நடிகர் ஜீவாவின், தந்தையும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்பி சவுத்ரி ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆர்பி சவுத்ரி தனது சொந்த ஊருக்கு சென்ற போது விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முன்னணி திரைப்பட தயாரிப்பாளரான ஆர்பி சவுத்ரி யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.

நடிகர் ஜீவாவின் தந்தையான ஆர்பி சவுத்ரி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். சரத் குமார் நடிப்பில் கடந்த 1994 -ஆம் ஆண்டு வெளிவந்த நாட்டாமை, விஜய் நடித்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், மம்மூட்டி, முரளி நடிப்பில் வெளியான ஆனந்தம், ராஜா மற்றும் சூர்யவம்சம் போன்ற பல மெகா ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.
தனது தயாரிப்பில் நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு ஆர்பி சவுத்ரி வாய்ப்பளித்துள்ளார். மூன்று முறை பிலிம்பேர் விருதும் ஆர்பி சவுத்ரிக்கு கிடைத்துள்ளது. ஆர்பி சவுத்ரிக்கு சுரேஷ், ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா என நான்கு மகன்கள் உள்ளனர். இதில் ஜித்தன் ரமேஷ் சில படங்களில் நடித்துள்ளார். ஜீவா கோலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார்.
1998 அடிபாபம் என்ற மலையாள படத்தை முதன் முதலாக சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி சவுத்ரி தயாரித்தார். விஜய்க்கு முதன் முதலாக பூவே உனக்காக படத்தை தயாரித்தவரும் ஆர் பி சவுத்ரி தான். இதேபோன்று விஜய்யின் ஜில்லா, திருப்பாச்சி, ஷாஜகான் உள்ளிட்ட படங்களையும் ஆர்பி சவுத்ரி தயாரித்துள்ளார்.
சமீபத்தில் தலைவர் தம்பி படத்தின் வெற்றி விழாவில் ஆர்பி சவுத்ரி பங்கேற்று இருந்தார். தனது மகனும் நடிகருமான ஜீவா மற்றும் பேரனுடன் பங்கேற்ற ஆர்பி சவுத்ரி, நகைச்சுவையாக சில கருத்துகளை பகிர்ந்து இருந்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளராக வலம் வந்த ஆர்பி சவுத்ரி கார் விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார்.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
இயக்குனர் பாரதிராஜா காலமானார்.. இமயம் சரிந்தது.. திரையுலகம் கண்ணீர்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications