அனுபவம் வேண்டாம் + சூப்பர் சம்பளம்.. சென்னை - கோவையில் பணி! Cognizant பணிக்கு நவ.,30 கடைசி நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, கோவை மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்ய பணி அனுபவம் தேவையில்லை. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.4 லட்சம் ஆண்டு சம்பளமாக வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட்டில்(Congnizant) இருந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

it jobs job jobs

தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி (Engineer Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு டெக்னிக்கல் சப்போர்ட் ரோலாகும். தேர்வாகும் நபர்கள் சர்வீஸ் டெஸ்க்கில் பணியாற்ற வேண்டியிருக்கும். இந்த பணிக்கு 2024ல் பிஇ, பிடெக் பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதன்மூலம் பணி அனுபவம் வேண்டாம் என்பது உறுதியாகி உள்ளது.

மேலும் 10, பிளஸ்2, கல்லூரி படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண் இருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. இந்த பணி என்பது Clint focused ஆக இருக்கும். இதனால் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டெக்னாலஜி தொடர்பான விபரங்களை விரைவாக கற்று கொண்டு Client-களிடம் எடுத்து சொல்வதற்கான திறமை இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். அதன்படி பார்த்தால் மாதம் ரூ.33,333 மாதசம்பளமாக கிடைக்கும். ஷிப்ட் முறையில் பணி இருக்கும். எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். நைட் ஷிப்ட்டில் பணியாற்றுவோருக்கு அலோவன்ஸ் தொகை வழங்கப்படும். அலுவலகம் சென்று வர Cabs மூலம் பிக் அண்ட் டிராப் செய்வது, பெர்பாமன்ஸை பொறுத்து மேலும் சில சலுகைகள் என்பது வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வோரிடம் Resume அதிகபட்சமாக 2 பக்கத்திலேயே இருக்க வேண்டும். பாஸ்போஸ்ட் சைஸ் போட்டோ, கல்லூரி படிப்புசான்றிதழ் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும்போது PAN Card-ல் உங்களின் பெயர் முகவரி சரியாக இருக்க வேண்டும். சான்று மற்றும் பார்ன் கார்டு இடையே பெயர் வித்தியாசம் இருந்தால் உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களின் பின்னணி விபரங்கள் முழுவதும் அறிந்தே பிறகே நியமனம் செய்யப்படுவார்கள்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை மற்றும் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தேவையை பொறுத்து பிற இடங்களிலும் கூட நியமனம் செய்யப்படலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய நவம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+