"அனுபவம் வேண்டாம்".. சென்னை - கோவையில் ஐடி வேலை.. அழைக்கும் Cognizant.. மே 31 கடைசி நாள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய மே 31ம் தேதி கடைசி நாளாகும். பிசிஏ, பிஎஸ்சி உள்ளிட்ட படிப்புகளில் டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பதால் விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை உள்பட 8 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் இருந்து தற்போது அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2023 அல்லது 2024ம் ஆண்டில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

cognizant-off-campus-hiring-for-analyst-trainee-role-including-chennai-and-coimbatore-apply-date-wil

அதன்படி பிசிஏ, பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், இயற்பியல், வேதியியல், ஸ்டேட்டிடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அல்லது அலைட் ஸ்ட்ரிம்ஸ் உள்ளிட்டவற்றில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

குறிப்பாக இவர்கள் 10, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். 59.9 சதவீத மதிப்பெண் கொண்டவர்களுக்கு அனுமதியில்லை. அரியர்ஸ் இருக்க கூடாது. விண்ணப்பம் செய்வோருக்கு டைம் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் எந்த இடத்தில் நியமனம் செய்யப்பட்டாலும் அங்கு பணியாற்ற தயாராகி இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் 8 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் சென்னை, கோவையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதுதவிர வெளிமாநிலங்கள் என்றால் பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே, மும்பை, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இரவு பணி என்றால் அதற்கு அலோவன்ஸ் வழங்கப்படும். Cab வசதி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி இறுதிக்கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+