10 வருடம் வேலை பார்த்தால் போதும்.. இனி PF தொகையை.. ஓய்விற்கு முன்பே முழுமையாக எடுக்கலாம்? புது விதி?
டெல்லி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO விதிகளில் அரசு பல மாற்றங்களை பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றங்கள் சந்தாதாரர்கள் தங்கள் சேமிப்பை பயன்படுத்தும் விதத்தில் கூடுதல் சுதந்திரத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடுகட்டுதல், திருமணம் மற்றும் கல்வி போன்ற தேவைகளுக்கான பணமெடுக்கும் வரம்புகளை தளர்த்த அதிகாரிகள் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது முன்பு போல EPFOல் பணம் எடுப்பது கடினம் கிடையாது. இனிமேல் எளிதாக பணம் எடுக்க விதிகளை கொண்டு வர உள்ளனர்.

EPFOல் பணம் எடுப்பது
தற்போதுள்ள விதிகளின்படி, EPFO உறுப்பினர்கள் தங்கள் முழு நிதியையும் 58 வயது ஓய்வு பெற்ற பிறகு அல்லது இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே எடுக்க முடியும். பகுதி நேர பணமெடுப்புக்கு சில குறிப்பிட்ட நிபந்தனைகள் உள்ளன. இந்த விதிகளை எளிதாக்க அரசு தீவிரமாகச் செயல்படுகிறது.
திருமணச் செலவுகளுக்காக, குறைந்தது ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பு மற்றும் அதனுடன் சேர்ந்த வட்டித் தொகையில் 50% வரை எடுக்கலாம். இது அவர்களின் சொந்தத் திருமணம், சகோதரர் அல்லது குழந்தைகளின் திருமணத்திற்கும் பொருந்தும். வீட்டுத் தேவைகளுக்கு, மொத்த இருப்பில் 90% வரை எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் சொத்து உறுப்பினரின் பெயரிலோ, வாழ்க்கைத் துணையின் பெயரிலோ அல்லது கூட்டாகவோ இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சேவை அவசியம்.
கல்விச் செலவுகளுக்காக EPFO
கல்விச் செலவுகளுக்காக, சந்தாதாரர்கள் தங்கள் பங்களிப்பில் 50% வட்டியுடன் எடுக்கலாம். ஆனால் இதற்கும் குறைந்தது ஏழு ஆண்டுகள் சேவை தேவைப்படுகிறது. இந்த சலுகை குழந்தைகளின் பத்தாம் வகுப்பு கல்விக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். தற்போதைய விதிகள் பலருக்கும் போதுமானதாக இல்லை என்ற கருத்து நிலவுகிறது.
அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய கட்டமைப்பின்படி, EPFO உறுப்பினர்கள் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை தங்கள் முழு நிதியையும் அல்லது ஒரு பகுதியையும் எடுக்க அனுமதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கும், ஒவ்வொரு EPFO உறுப்பினரின் ஒட்டுமொத்த நிதியில் சில சேமிப்பு தொகை இருக்கும். அதை அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க முடியும். அதாவது அதை எடுக்க வேண்டும் என்றால் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு வருடத்திற்குள் இந்த மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாங்கள் உறுப்பினர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க விரும்பவில்லை. இது அவர்களுடைய பணம்; அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப நிர்வகிக்க அவர்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணப்புழக்கம் அதிகரிக்கும்
இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த விதிமுறைகளை தளர்த்துவது, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு உடனடி பணப்புழக்கத்தை வழங்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அதன் உறுப்பினர்களுக்குப் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புகள், வருங்கால வைப்பு நிதி (PF) விவரங்களை அணுகுவதையும், PF கணக்குகளை மாற்றுவதையும் எளிதாக்குகின்றன.
இத்தனை காலமாக EPFO பக்கத்தை அணுகுவது கடினமாக இருந்தது. அப்படியே உள்ளே சென்றாலும் பல சேவைகளை பெற முடியாது. பெரும்பாலும் EPFO பக்கம் இயங்காமல் இருக்கும். EPFO அவ்வளவு எளிதாக அணுக கூடியதாக இல்லை. இதைதான் மாற்றும் வகையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர்.
முக்கியமாக, 'Passbook Lite' சேவை மூலம் PF இருப்பை விரைவாகச் சரிபார்க்க முடியும். அத்துடன், வேலை மாறுபவர்களுக்கு அத்தியாவசியமான 'Annexure K' பரிமாற்றச் சான்றிதழை ஆன்லைனில் அணுகும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, புகார்களைக் குறைத்து, PF தகவல்களைப் பெறுவதை எளிமையாக்கும்.
இதுவரை, ஊழியர்கள் தங்கள் PF பங்களிப்புகள் மற்றும் திரும்பப் பெறும் விவரங்களைக் காண தனி Passbook போர்ட்டலில் உள்நுழைய வேண்டியிருந்தது. 'Passbook Lite' அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஒரே உள்நுழைவு மூலம் EPFO உறுப்பினர் போர்ட்டலிலேயே இந்தத் தகவலை நேரடியாகப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications