நாடு முழுக்க.. பல லட்சம் பேருக்கு.. வங்கி கணக்கில் செலுத்தப்படும் ரூ. 3000.. இபிஎஃப்ஓ அதிரடி முடிவு!
சென்னை: ஜூலை மாதத்தில் இபிஎஃப்ஓவில் புதிதாக இணைந்த 19.94 லட்சம் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 3000ல் இருந்து வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வருடமும்.. ஒவ்வொரு மாதமும் புதிதாக பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு அவர்களின் நிர்வாகம் சார்பாக EPFO கணக்கு தொடங்கப்படும். அந்த வகையில், EPFO இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 19.94 லட்சம் உறுப்பினர்களை புதிதாக சேர்த்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நடத்தும் பிஎப் கணக்கில் 10.52 லட்சம் புதிய அல்லது முதல் முறையாகத் தொழிலாளர்கள் சேர்ந்துள்ளனர் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் புதிய உறுப்பினர்கள் (19.94 லட்சம்) பதிவு செய்யப்பட்டு உள்ளனர். ஜூலை மாதத்தில் சேர்க்கப்பட்ட 8.77 லட்சம் உறுப்பினர்கள் 18-25 வயதுக்குட்பட்டவர்கள். ஒரே மாதத்தில் சேர்க்கப்பட்ட மிக அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகும் இது.. சமீபத்திய தரவுகளின்படி, 18-25 வயதுக்குட்பட்ட 6.25 லட்சம் உறுப்பினர்கள் முதல் முறையாக வேலை செய்பவர்கள் அல்லது புதிதாக இணைந்தவர்கள் ஆவர். புதிதாக சேருபவர்களில் சுமார் 59.4 சதவீதம் பேர் 18-25 வயதிற்குள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே தொழில் உற்பத்தி துறையில் முதல்முறையாக பணிக்கு சேரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சந்தாவை அரசே செலுத்தும்; அனைத்து துறைகளிலும் கூடுதலாக பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி சந்தாவில் ₹3000 அரசு செலுத்தும்.
இபிஎஃப்ஓவில் பதிவு செய்து முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை மூன்று தவணைகளில் மத்திய அரசே அவர்களின் இபிஎஃப்ஓ கணக்கில் செலுத்தும். ₹15,000 வரை அதிகபட்சம் மத்திய அரசு செலுத்தும். இதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ₹1 லட்சம் சம்பளமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜூலை மாதத்தில் இபிஎப்ஓவில் இணைந்த 19.94 லட்சம் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 3000ல் இருந்து வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது அவர்களின் நேரடி வங்கி கணக்கிற்கு செல்லாமல் பிஎப் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாற்றங்கள்: தொழிலாளர் அமைச்சகம் EPFO இன் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களைச் கொண்டு வந்துள்ளது. , இதில் புதிய டிஜிட்டல் கட்டமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. முன்பு இதில் பணம் எடுப்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் ஒரு வேலையில் ஆறு மாதங்கள் பணியை முடிக்காத புதிய பணியாளர்கள் முன்பு இபிஎப்ஓ தொகையை எடுக்க முடியாது. இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது. இனி நீங்கள் பணிக்கு சேர்ந்த அடுத்த மாதமே கூட பிஎப் தொகையை திரும்பப் பெறத் தகுதி பெறுவீர்கள்.
அதேபோல் மத்திய அரசு, 1995ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கு withdrawal benefits எனப்படும் திரும்பப் பெறும் பலன்களை வழங்குகிறது. பல்வேறு துறைகளில் பணிகளில் உள்ள சராசரியாக 7 லட்சம் பேருக்கும் அதிகமானோர் சந்தோசம் அடையும் வகையில் இபிஎப்ஓ விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு இதற்கான செய்தியை மத்திய அரசு அனுப்பி உள்ளது. மத்திய அரசாங்க அறிக்கையின்படி, இந்தத் திருத்தம் ஆறு மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பு சேவையுடன் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஆனது. அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பின் வேலையை விட்டு விட்டு வெளியேறும் 7 லட்சத்திற்கும் அதிகமான EPS உறுப்பினர்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications