மதுரையில் IT வேலை.. HCL தரும் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.. சூப்பர் சான்ஸ்
மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
IT துறை.. இன்றைய இளைஞர்கள் அதிகமானவர்கள் நுழைய நினைக்கும் துறையாக இருந்து வருகிறது. கல்லூரி படிப்பை முடித்தும் கூட பலரும் ஐடி வேலைகளுக்காக தனித்தனி கோர்ஸ்களை முடிக்கின்றனர்.

இப்படி பலரின் பேவரைட்டான துறையாக இருக்கும் ஐடி சார்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி டாட்நெட் டெவலப்பர் (Dotnet Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பணிக்கு இளநிலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு தொடர்பான படிப்பை முடித்திருக்க வேண்டும். அடுத்ததாக 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் .NET அல்லது அதற்கு தொடர்புடைய பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் வெப் அடிப்படையிலான அப்ளிகேஷன்ஸ் டெவலப்பிங்கில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சி#, எச்டிஎம்எல், ஜாவா ஸ்கிரிப்ட, விபி ஸ்கிரிப்ட்/ஏஎஸ்பி அல்லது .NET ஆகியவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் MS SQL Server மற்றும் MySQL அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் agile Developement-ல் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி பற்றியும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்வோரின் ரெஸ்யூமை பார்த்துவிட்டு இண்டர்வியூவுக்கு அழைப்பார்கள். இண்டர்வியூ தேதி விவரங்கள் தொடர்பு கொள்ளும்போது தெரிவிக்கப்படலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications