மதுரையில் ஐடி வேலை.. நாளை இண்டர்வியூ.. அழைக்கும் HCL.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (மே 24) நடைபெற உள்ளது.

மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் Complaince Engineer for Medical Devices பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிஇ/பிடெக்கில் மெக்கானிக்கல் பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி 2021, 2022, 2023, 2024 ம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

it jobs jobs job madurai

இந்த பணியை விரும்புவோர் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சமாக இரண்டரை ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர அனலிட்டிக்கல், பிரசென்டேஷன் மற்றும் இன்வெஸ்டிகேஷன் ஸ்கில் இருக்க வேண்டும். மெடிக்கல் டிவைஸ் Complains பேக்கிரவுண்ட் கொண்டவர்கள் என்றால் அது பிளஸ் பாயிண்ட்டாகும்

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திறமை மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் மதுரையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த வேலைக்கான இண்டர்வியூ நாளை (மே 24ம் தேதி) மதுரையில் நடைபெற உள்ளது. Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு ரெஸ்யூம் விபரங்களை அனுப்பி வைக்கலாம். அதன்பிறகு இண்டர்வியூவுக்கான முகவரி அனுப்பி வைக்கப்படும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+