அனுபவம் வேண்டாம்.. அரியர்ஸ் இருந்தாலும் ஓகே.. HCL வேலைவாய்ப்பு.. அக்.,25ல் இண்டர்வியூ
சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு பணி அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள், அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் அக்டோபர் 25ம் தேதி நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது Freshers Voice Process (Banking Domain) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

பாடவாரியாக பார்த்தால் பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிஎஸ்சி, பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் இருந்தாலும் பரவாயில்லை. அதேபோல் தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மாறாக பிஇ, பிடெக் இன்ஜினியரிங், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புராசஸ் அசோசியேட் பிரிவில் ஓராண்டு வரை அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அவர்கள் பணிக்கான சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
பணி என்பது ஷிப்ட் அடிப்படையில் இருக்கும். இதனால் எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் தயாராக இருக்க வேண்டும். இரவு பணி செய்யவும் ரெடியாக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
அலுவலகத்தில் Cab வசதி ஏற்படுத்தி தரப்படும். இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி அளிக்கப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 25ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ Face To Face முறையில் நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூக்கு செல்வோர் லேப்டாப் எடுத்து செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications