HCL நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னையில் நவம்பர் 8 ல் இண்டர்வியூ.. ரெடியா?
சென்னை: எச்சிஎல் நிறுவனத்தில் டே்டா இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான இண்டர்வியூ நவம்பர் 8 ம் தேதி காலையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்று பயன் பெறலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து GCP Data Engineering Hackathon நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பம் செய்யலாம். அதன்படி விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும்.
அதன்படி BigQuery, Cloud Composer or Air Flow, Data Flow or Dataproc or Datafusion, Python or PySpark, DBT, SQL, Looker உள்ளிட்டவை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் GKE, Spanner, Harness, GenAI உள்ளிட்டவை தெரிந்திருப்பதும் நல்லதாகும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஐந்தரை ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ நவம்பர் 8 ம் தேதி காலையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூ சென்னையில் நடைபெறும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள இ-மெயில் முகவரிக்கு ரெஸ்யூம் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
அதில் செல்போன் எண், இ-மெயில், மொத்த பணி அனுபவம், Relevant அனுபவம், தற்போதைய சிடிசி, எதிர்பார்க்கும் சிடிசி, நோட்டீஸ் பிரியட், தற்போது பணியாற்றும் நிறுவனத்தின் பெயர், இடம், பணி செய்ய ஆர்வமாக இருக்கும் இடம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
அதன்பிறகு விண்ணப்பத்தாரர்களுக்கு இண்டர்வியூவுக்கான இடம், நேரம் உள்ளிட்டவை பற்றிய தகவல் தெரிவிக்கப்படும். இண்டர்வியூ Face to Face முறையில் இருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications