2 பிரிவில் வேலை.. நவம்பர் 28 - 29ல் இண்டர்வியூ.. சென்னை எச்சிஎல் நிறுவனம் தந்த புதிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் நிறுவனம் சார்பில் செங்கல்பட்டில் நவம்பர் 28, நவம்பர் 29 என 2 நாட்கள் இண்டர்வியூ நடைபெற உள்ளது. 2 பிரிவில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரியில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் (HCL or HCL Technologies) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

it jobs job

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் Fincrime Associate & Senior Anlalyst பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் அசோசியேட் / அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 2 முதல் 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். சீனியர் அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வார் 5 முதல் 7 ஆண்டு பண அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு KYC, AML,CDD பிரின்சிபிள் மற்றம் பிராக்டிஸ் தெரிந்திருக்க வேண்டும். மேலும் Dilignece, reviewing suspicious account activity,enhanced due diligence உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் UK ஷிப்ட்டில் பணியாற்ற வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் உடனடியாக அல்லது ஒரு மாத நோட்டீஸ் பீரியட் இடைவெளியில் பணியில் சேர வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இந்த பணிகளுக்கான இண்டர்வியூ என்பது நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.நாவலூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

அதாவது HCL - ETA 1 - Village and Panchayat, ETA - Techno Park, Special Economist Zone 33 Rajiv Gandhi Salai, Navallur Taluk, Chengalpattu, Tamil Nadu 603103 என்ற முகவரியில் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரியில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+