அரசு வேலைக்கு செல்ல வேண்டுமா? டிஎன்பிஎஸ்சியில் தேர்வாவது ரொம்ப ஈஸி! நிறைய படிக்க வேண்டாம்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கட் ஆப் வாங்குவது மிகவும் எளிதானது. இந்த பயிற்சியை பெற்றிருந்தால் போதுமானது. அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள். இதனால் ஏராளமான மாணவர்கள் தற்போது பழைய முறைக்கு திரும்புவது போல் இந்த பயிற்சியை பெறுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணி நியமனம் செய்ய தமிழக அரசு தேர்வாணையம் என்ற டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை நடத்தி ஆட்களை பணியமர்த்தி வருகிறது. விஏஓ முதல் உயர் பதவி வரை அனைத்துக்கும் இந்த ஆணையம் தேர்வு நடத்துகிறது.

அரசு பணியில் சேருவதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் தட்டச்சு பயிற்சிக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதனால் டைப் ரைட்டிங் எனப்படும் தட்டச்சு பயிற்சி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதாவது தட்டச்சு பயிற்சியில் சேர்க்கை சதவீதம் 10 சதவீதம் ஆகும் என பயிற்சி நிறுவனத்தினர் தெரிவிக்கிறார்கள். தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்துகிறது.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இதில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளை முடித்தவர்கள், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதி வருகிறார்கள். அப்போது அவர்கள் இந்த தொழில்நுட்பச் சான்றிதழை பெற்றிருப்பதன் மூலம் எளிதில் கட் ஆப் மதிப்பெண்களைப் பெற்று அரசு வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
கொரோனா காலத்தில் தொடர்ந்து 2 ஆண்டுகள் தட்டச்சு, சுருக்கெழுத்து படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் வணிக ரீதியில் பயிற்சி நடத்துவோர் சிரமமடைந்தனர். கொரோனா தொற்று முடிந்தவுடன் தட்டச்சு பயில்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது அரசு வேலைவாய்ப்பில் இந்த தகுதியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்துள்ளனர்.
இதனால் டைப் ரைட்டிங் படிப்போரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. அது போல் சுருக்கெழுத்து உயர் வேகத் தேர்வு ஆகஸ்ட் 10 ஆம் தேதி, 11 ஆம் தேதி நடைபெறுகிறது. சுருக்கெழுத்து இளநிலை, முதுநிலை தேர்வுகள் ஆகஸ்ட் 24, 25 ஆம் தேதிகளில் நடக்கின்றன. வணிகவியல், அக்கவுன்டன்சி இளநிலை, முதுநிலை தேர்வுகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடக்கிறது.
இந்த தட்டச்சு இளநிலை, முதுநிலை, முதுநிலை உயர் வேகம் ஆகிய தேர்வுகள் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் அக்டோபர் 29ஆம் தேதி வெளியிட போவதாக அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications