பொதுத்துறை வங்கியில் அதிகாரி ஆகணுமா? ஐபிபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் (எஸ்.ஓ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி, வயது வரம்பு என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் (SO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..

பணியிடங்கள் விவரம்:
ஐடி அதிகாரி கிரேட் I - 346 பணியிடங்கள்
வேளாண் கள அலுவலர் - 25
ராஜ்பாஷா அதிகாரி - 170
சட்ட அதிகாரி - 125
எச்.ஆர்/ பணியாளர் அதிகாரி - 205
மார்க்கெட்டிங் அதிகாரி - 25 என மொத்தம் 896 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். ஐடி(தகவல் தொழில்நுட்பம்) அதிகாரி பணிக்கு என்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் நுட்ப படிப்புகள் முடித்து இருக்க வேண்டும். வேளாண்மை கள அதிகாரி பணிக்கு வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, பயோடெக்னாலஜி உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த படிப்புகளை முடித்து இருப்பது அவசியம். எல்.எல்.பி பணிக்கு சட்டம் படித்து முடித்து இருக்க வேண்டும்.. கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: அனைத்து பணியிடங்களுக்கும் 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு. பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.
தேர்வு எப்போது?: தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 21.08.2024- கடைசி நாளாகும். முதன்மை தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும். மெயின் தேர்வு டிசம்பர் மாதத்திலும் நேர்முகத்தேர்வு பிப்ரவரி/மார்ச்சில் நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க முன்பாக தேர்வு அறிவிப்பினை விண்ணப்பதாரர்கள் படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://www.ibps.in/index.php/specialist-officers-xiv/ செய்யவும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications