ஐடிபிஐ வங்கியில் வேலை.. 600 பணியிடங்கள்..டிகிரி முடிச்சிருந்தா போதும்! இன்றே கடைசி நாள்..விட்றாதீங்க
சென்னை: ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 600 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 50 இடங்கள் நிரப்ப படுகின்றன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க இன்றே கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக ஐடிபிஐ வங்கி உள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கியில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 600 காலிப்பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
* இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager)- 500 பணியிடங்கள்
* இளநிலை உதவி மேலாளர் (வேளாண்மை உதவி அதிகாரி) - 100 பணியிடங்கள்
என மொத்தம் 600 பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 50 பணியிடங்கள் உள்ளன. அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் 65 பணியிடங்களும், கேரளாவில் 30 பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. தமிழக பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்து இருப்பது அவசியம்
கல்வி தகுதி: ஜே.ஏ.எம் எனப்படும் இளநிலை உதவி மேலாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். கணிணி அறிவு கட்டாயம்.
ஜேஏஎம் விவசாய உதவி அதிகாரி பணிக்கு விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பி.எஸ்.சி/ பி.டெக், பிஇ உள்ளிட்ட டிகிரி முடித்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒபிசி, எஸ்.சி /எஸ்.டி உள்ளிட்ட பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு: இரண்டு பணியிடங்களுக்குமே 20 வயது முதல் 25 வயதுக்க்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250 கட்டணம் ஆகும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு மையங்கள்: நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது?: ஆர்வமும் தகுதியும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து அறிந்து கொண்ட பின்னர் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடந்த 21.11.204 அவகாசம் தொடங்கியது. விண்ணப்பிக்க இன்றே (30.11.2024) கடைசி நாளாகும். எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்துவிடுங்கள்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.idbibank.in/pdf/careers/JAM-advertisement-2025-26.pdf
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications