For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாதஊதியம் ரூ.34,000.. வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு.. 10, டிகிரி முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: வருமான வரித்துறையில் மாதம் சம்பளம் ரூ.34 ஆயிரம் கிடைக்கும் வகையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 10, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருமான வரித்துறை செயல்பட்டுள்ளது. இங்கு திறமையான விளையாட்டு வீரர்கள் கோட்டா உள்பட பல்வேறு வகைகளில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

 காலியிடங்கள்

காலியிடங்கள்

வருமான வரித்துறையில் மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் பகுதிகளில் உள்ள வருமான வரி தலைமை கமிஷனர் அலுவலகத்தில் Inspector of Income Tax, Tax Assistant, Multi Tasking Staff என 3 பிரிவுகளில் மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Income Tax Inspector பணிக்கு ஒருவர், Tax Assistant பணிக்கு 5 பேர், Multi Tasking Staff பணிக்கு 18 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

Income Tax Inspector, Tax Assistant பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி முடித்திருக்க வேண்டும். Multi Tasking Staff பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

Income Tax Inspector பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். Tax Assistant பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். Multi Tasking Staff பணியை பெற விரும்புவோர் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வும் உண்டு.

 மாத ஊதியம் எவ்வளவு?

மாத ஊதியம் எவ்வளவு?

Income Tax Inspector பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.9,300 முதல் ரூ.34 ஆயிரத்து 800 வரையும், Tax Assistant மற்றும் Multi Tasking Staff பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.5,200 முதல் ரூ.20 ஆயிரத்து 200 வரையும் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து Joint Commissioner of Income Tax, Headquarters (Personnel &Establishment), 1st flooor, Room No.14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata-700069 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பிவேண்டும். இந்த தபால் டிசம்பர் மாதம் 2ம் தேதிக்கு கிடைக்கும்படி உரிய ஆவணங்களை இணைத்து முன்கூட்டியே அனுப்ப வேண்டும்.

 விளையாட்டு வீரர் கோட்டா

விளையாட்டு வீரர் கோட்டா

இந்த பணிகள் அனைத்தும் திறமைவாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவாக உள்ளது. இதனால் ஏதேனும் ஒரு விளையாட்டில் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் சர்வதேச போட்டி, மாநில அளவிலான போட்டிகளில் பல்கலக்கழங்கள் இடையேயான போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்று இருக்க வேணஅடும். மேலும் தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அணியில் இடம்பிடித்தவர்களும், National Awards in Physical Efficiency விருது பெற்றவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

English summary
Various posts are to be filled in the Income Tax department with a monthly salary of Rs.34 thousand. Candidates who have completed 10th degree can apply for this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X