செம.. மாதம் ரூ.63,200 வரை சம்பளம்.. தபால் துறையில் சூப்பர் வேலை! 8 ம் வகுப்பு முடித்தாலே போதும்!
சென்னை: மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள skilled Artisans பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாதசம்பளமாக அதிகபட்சமாக ரூ.62,200 வரை வழங்கப்பட உள்ளது.
தபால் துறையில் தற்போது இந்தியா அளவிலும், ஒவ்வொரு மாநிலங்கள் வாரியாகவும் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான முறையான அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

தபால் துறையை பொறுத்தமட்டில் 8 முதல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கும் கூட நல்ல சம்பளத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தான் இந்தியாவில் ஏராளமானவர்கள் தபால் துறை பணிக்காக காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே தான் தபால் துறையில் தற்போது Skilled Artisans பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது மோட்டார் வாகன மெக்கானிக் (ஸ்கீல்ட் ஆர்ட்டிசியன்ஸ் கிரேட் III) பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அரசு தொழில்நுட்ப நிறுவனத்தில் குறிப்பிட்ட பிரிவில் சான்றிதழ் படிப்பு அல்லது 8 ம் வகப்பு முடித்து ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் மோட்டார் வாகன மெக்கானிக் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கட்டாயமாக எச்எம்வி ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ19,900 சம்பளமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வு வழங்கப்படும். வயது வரம்பு என்பது 01.07.2023ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் 19.09.2023 ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை உரிய ஆவணங்களின் நகல்களோடு இணைத்து ‛‛The Manager (Group A), Mail Motor Services, GPO Compound, sultania Road, Bhopal - 462001'' என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் அடுத்த மாதம் 19க்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்தின் மீது ‛‛Application for the post of Mechanic (Skilled Artisans Grade - III) at MMS, Bhopal/Indore'' என குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications