ரெடியா? 8ம் வகுப்பு முடித்தாலே போதும்.. கைநிறைய சம்பளம்.. தபால் துறையில் சூப்பர் வேலை!
மும்பை: இந்திய தபால் துறையில் காலியாக உள்ள skilled Artisans பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்து மாதந்தோறும் கைநிறைய சம்பளம் பெறலாம்.
மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால் துறை இயங்கி வருகிறது. தற்போது 2023ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்புகள் நடந்து வருகின்றன. அதன்படி தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தபால் துறையில் தற்போது காலியாக உள்ள Skilled Aritsans பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி மெக்கானிக் (மோட்டார் வாகனம்) பணிக்கு 3 பேர், மோட்டார் வாகன எலக்ட்ரீசியன் பணிக்கு 2 பேர், வெல்டர், டயர்மேன், டின்ஸ்மித், பெயிண்டர், பிளக்ஸ்மித் உள்ளிட்ட பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பணிக்கான குறிப்பிட்ட பிரிவில் சான்று ஐடிஐயில் சான்று பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் 8 ம் வகுப்பு முடித்து குறிப்பிட்ட பணியில் ஒருவருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிக் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி பிற பிரிவினருக்கு வயது சலுகைகள் உண்டு. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மே மாதம் 13ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு மே மாதம் 13ம் தேதிக்குள் The Senior Manager, Mail Motore Service, 134-A Sudam Kalu Ahire Marg, Worli, Mumbai - 4000018 என்ற முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட், ரிஜிஸ்டர் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications