தேதி முடிய போகுது.. இந்திய விமானப்படையில் 3,500 காலிப்பணியிடங்கள்.. மாதம் 30,000 சம்பளம்!
சென்னை: அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 3,500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். நாளை தான் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 3,500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணிக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? என்பவை உள்பட முழுமையான விவரங்கள் குறித்து இங்கே காண்போம்.

மொத்த பணியிடங்கள்: கிட்டத்தட்ட 3,500 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க அவகாசம் வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் நாளை (06.02.2024) ஆகும்.
கல்வி தகுதி: கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடபிரிவுகளில் 10+2 அல்லது அதற்கு இணையான தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அல்லது டிப்ளமோ என்ஜினியரிங் மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / ஆட்டோ மொபைல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் படித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த தெளிவான விவரங்கள் தேர்வு அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பதாரர்கள் முழு தகவலையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 02 ஜனவரி 2004 முதல் 02 ஜூலை 2007 க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 21 ஆகும்.
தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, Adaptability Test மற்றும் மெடிக்கல் பரிசோதனை ஆகியவை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும். https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்: அக்னிவீரர்களுக்கான திட்டத்தின் படி ஊதியம் வழங்கப்படும். அதாவது முதல் வருடத்தில் மாதம் ரூ.30 ஆயிரமும் (கையில் In Hand- ரூ.21,000) இரண்டாவது வருடம் 33 ஆயிரம் (கையில் 23,100), மூன்றாம் வருடம் 36,500 ( 23,550), நான்கு வருடத்தில் 40,000 ( ரூ.28,000) என கிடைக்கும். நான்கு ஆண்டுகள் முடிவில் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும். தேர்வு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2025.pdf இங்கே கிளிக் செய்யவும்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications