ரூ.69,000 மாத ஊதியம்.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சென்னையிலேயே பணி..சூப்பர் வாய்ப்பு
சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.49 ஆயிரம் முதல் ரூ.69 ஆயிரம் வரை கிடைக்கும்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் ஒன்றும். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாட்டின் பல்வேறு நகரங்களில் கிளைகள் உள்ளன.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடம் எவ்வளவு?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Specialist Officer பிரிவில் Manager அந்தஸ்தில் மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. Manager அந்தஸ்தில் Business Analyst, Cloud Engineer, Data Scientist, Network Security Engineer, Middleware Engineer, Merchant Acquisition, Digital Banking (Reconciliation) மற்றும் Compliance & Audit பிரிவில் தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் Manager அந்தஸ்தில் Data Engineer, Oracle DBA, Server Administrator, Network - Routing & Switching Engineer, ATM Managed Services & ATM Switch, Hardware Engineer, Solution Architect, Digital Banking (RTGS/ NEFT), Digital Banking (Debit Card & ATM Switch) பிரிவுகளில் தலா 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். Manager அந்தஸ்தில் Digital Banking (IB, MB, UPI) பிரிவில் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் டிப்ளமோ, எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

வயது வரம்பு என்ன?
விண்ணப்பத்தாரர்களின் குறைந்தபட்ச வயது என்பது 25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விண்ணப்பத்தாரர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், பிடபிள்யூ பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வுகள் உண்டு. வயது வரம்பானது 01.11.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

மாத சம்பளம் என்ன?
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.48 ஆயிரத்த 170 கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.69 ஆயிரத்து 810 வரை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பம் செய்பவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத், தமிழ்நாட்டின் சென்னை ஆகிய நகரங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும் . விண்ணப்பம் செய்ய டிசம்பர் 17ம் தேதி கடைசி நாளாகும். முன்னதாக இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய நவம்பர் 30ம் தேதி கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
விண்ணப்ப தேதி நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை காண Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்ப விபரங்களை ஒரே பக்கத்தில் காண Click Here












Click it and Unblock the Notifications