IT Jobs: அனுபவம் தேவையில்லை.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் வேலை ரெடி.. ஏப்ரல் 24ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான இண்டர்வியூ ஏப்ரல் 24 ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நாவலூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு அனுபவம் தேவையில்லை. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதுதவிர நம் நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் International Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கல்வி தகுதி என்ன?
இன்டர்நேஷனல் வாய்ஸ் புராசஸ் பணிக்கு கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். இது Freshers-க்கான பணியாகும். எனவே முன் அனுபவம் தேவையில்லை. அதேவேளையில் பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்க வேண்டாம்.
வேறு தகுதிகள் என்ன வேண்டும்?
இந்த பணியை விரும்புவோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். மேலும், மல்டி டாஸ்க் திறமை இருக்க வேண்டும். ஷிப்ட் என்பது ரொட்டேஷனல் முறையில் இருக்கும். இதனால் நைட் ஷிப்ட் பார்க்கவும் தயாராக வேண்டும்.
பணி என்ன?
பணிக்கு தேர்வாகும் நபர்கள் கஸ்டமர் சப்போர்ட் (புராசஸ் அசோசியேட்) என்ற பெயரில் நியமனம் செய்யப்படுவார்கள். இதனால் Inbound Calling இருக்கும். அதேவேளையில் சேல்ஸ் அல்லது அப்செல்லிங் அல்லது கிராஸ் செல்லிங் கிடையாது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 24ல் இண்டர்வியூ
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்தபணிக்கான இண்டர்வியூ ஏப்ரல் 24ம் தேதி (நாளை மறுநாள்) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூ எங்கே?
இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல் 24ம் தேதி HCL Technologies Ltd, SandhyaInfocity, No.33, Block 1, Rajiv Gandhi Salai (OMR), Navalur, Chennai - 600 130 ETA 3 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு தான் இண்டர்வியூ நடைபெறும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் நாவலூரில் உள்ள அலுவலகத்திலேயே நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications