ITJOBS: சென்னை - கோவையில் ஐடி வேலை.. வீட்டில் இருந்தும் பணியாற்றலாம்.. IBM தரும் சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎம் சார்பில் அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கர்நாடகாவின் பெங்களூர், மைசூர் உள்பட 19 இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். இது ஹைபிரிட் மாடல் பணியாகும். இதனால் வாரத்தில் 2 நாட்கள் வரை வீட்டில் இருந்து கூட பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎம் (IBM) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

it-jobs-ibm-hiring-for-associate-system-engineer-role-for-pan-india-including-chennai-and-coimbator

ஐபிஎம் நிறுவனத்தில் தற்போது அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர் (Associate System Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Entry Level பணியாகும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை 2025ம் ஆண்டில் முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. அனுபவம் தேவையில்லை.

பிஇ, பிடெக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதனை சார்ந்த துணை படிப்புகள் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பாடவாரியாக விவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு 6 சிஜிபிஏ/60% வைத்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக உரையாட தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வோருக்கு புரோகிராமிங் லேங்குவேஜ்களான Java, C++, Python, Node.Js உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். சாப்ட்வேர் டெவலப்மென்ட் லைப் சைக்கிள் கான்செப்ட்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.

அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதவிர பெங்களூர், மைசூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, கொச்சி, புவனேஸ்வர், டெல்லி, அகமதாபாத், லக்னோ, கொல்கத்தா, குர்கிராம், நொய்டா, விசாகப்பட்டினம்,நவி மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இது ஒரு Hybrid வகை பணியாகும். இதனால் வாரத்தில் அதிகபட்சமாக 2 நாட்கள் வரை அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றிய விபரம் கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறித்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+