டிப்ளமோ போதும்.. விப்ரோவில் வேலைவாய்ப்பு.. மாதசம்பளம் + பிடெக் படிக்க சான்ஸ்.. செப்.30 கடைசி நாள்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விப்ரோ செயல்பட்டு வருகிறது. இந்த பணிக்கு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும். இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளத்துடன் விப்ரோ ஸ்பான்ஷர்ஷிப்பில் பிடெக் படிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
விப்ரோ டெக்னாலஜிஸ் (Wipro Technologies) நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது School of IT infrastructure Management என்ற பெயரில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்? விண்ணப்பம் செய்வோருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்? என்பது பற்றிய முழு விவரம் வருமாறு:
விண்ணப்பத்தாரர்கள் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில் பாஸாகி டிப்ளமோ படிப்பை 2024, 2025ம் ஆண்டில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். பாடவாரியாக பார்த்தால் டிப்ளமோவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இவர்கள் கண்டிப்பாக கணிதத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். பிசினஸ் கணிதம், அப்ளைட் கணிதம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. விண்ணப்பம் செய்வோர் தொலைத்தூர கல்வி மூலம் 10, 12ம் வகுப்பு படித்திருக்கலாம் ஆனால் டிப்ளமோவை பார்ட் ஃடைம், தொலைத்தூர கல்வி மூலம் முடித்திருக்க கூடாது. கண்டிப்பாக கல்லூரி சென்று டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்.
விண்ணப்பம் செய்வோருக்கு 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Stipend முறையில் சம்பளம் வழங்கப்படும். முதல் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,400 வழங்கப்படும். அதன்பிறகு 2ம் ஆண்டு ரூ.15,488, 3ம் ஆண்டில் ரூ.17,553, 4வது ஆண்டில் ரூ19,918 வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு பிடெக் படிப்பை படிக்க விப்ரோவில் இருந்து ஸ்பான்ஷர்ஷிப் வழங்கப்படுகிறது. இதற்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. படிப்புக்கான செலவை விப்ரோ ஏற்கும்.
விப்ரோவில் பணியாற்றி கொண்டே பிடெக் படிப்பை முடிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அன்று இரவு 11.59 மணிக்குள் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு 4 ரவுண்டுகளாக இண்டர்வியூ என்பது நடக்கும்.
முதலில் ஆன்லைன் அசஸ்மென்ட் என்ற வகையில் தலா 20 நிமிடங்கள் என்று மொத்தம் 80 நிமிடங்கள் வரை முதல் ரவுண்ட் நடக்கும். இதில் Verbal, 2வது Analytical, 3வது Quantitative, 4வது Written Communication ஆகியவை இருக்கும். அடுத்ததாக 2வது ரவுண்ட்டில் Business Discussion, 3வது ரவுண்ட்டில் எச்ஆர் டிஸ்கஷன், 4வது ரவுண்ட்டில் Free Skill Agreement இருக்கும்.
இது, PAN India பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பணிக்கு சர்வீஸ் அக்ரிமென்ட் உள்ளது. சர்வீஸ் அக்ரிமென்ட்டாக 48 மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 4 ஆண்டுகள் விப்ரோவில் கட்டாயம் பணி செய்ய வேண்டும். அதற்கு முன்பு பணியை விடும் பட்சத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
IT Jobs: அனுபவம் வேண்டாம்.. நாளை ஆன்லைனில் இண்டர்வியூ! எச்சிஎல் தரும் சூப்பர் வேலை -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications