மதுரை தியாகராஜர் கல்லூரியில் வேலை.. அரசு பணியிடம்.. டிகிரி முடிச்சவங்களுக்கு செம சான்ஸ்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் உள்ள தியாகராஜர் என்ஜினியரிங் கல்லூரியில் ஆசிரியர் அல்லாத பிற பணியிடங்களில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? கல்வித்தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? என்பது போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

மதுரையில் உள்ள பிரபலமான கல்லூரிகளில் ஒன்றாக தியாகராஜர் என்ஜினியரிங் கல்லூரி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இந்த கல்லூரி அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியாகும். இந்த கல்லூரியில் ஆசிரியர் அல்லாத பிற பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது முற்றிலும் அரசு பணியிடம் ஆகும். என்னென்ன பணியிடங்கள் உள்ளன. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? கல்வி தகுதி என்ன உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

job iob bank employment

பணியிடங்கள் விவரம்:

1. உதவிப் பேராசிரியர் - மின் மற்றும் மின்னணு பொறியியல்
2. கிளர்க்3. லேப் டெக்னிஷியன்- சிவில் பொறியியல்
4. லேப் டெக்னிஷியன் - மெக்கட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல்/EEE/ECE
5. லேப் டெக்னிஷியன் - CSE/IT/CSBS
6. லேப் டெக்னிஷியன் - வேதியியல்

கல்வித் தகுதி:

பேராசிரியர் பணியிடத்திற்கு பி இ / பிடெக் மற்றும் எம்.இ,எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலம. EEE பாடப்பிரிவை எடுத்து படித்து இருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி அவசியம். முனைவர் பட்டம் முடித்து இருக்க வேண்டும்.

கிளர்க்:

குறைந்தது 5 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.

லேப் டெக்னிஷியன்:

லேப் டெக்னிஷியன் பணிக்கு துறை சார்ந்த பிரிவில் டிப்ளமோ படிப்பு முடித்து இருக்க வேண்டும். வேதியியல் லேப் டெக்னிஷியன் பணிக்கு டிகிரி முடித்து இருக்க வேண்டும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வி தகுதி பற்றிய விவரங்களை இருமுறை சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இந்திய அரசு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 10.05.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.05.2025 ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தியாகராஜர் கல்லூரி இணையதளத்தில் (https://www.tce.edu/careers) சென்று ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.tce.edu/sites/default/files/2025-04/Ad-May-2025.png

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+