தமிழக அரசின் அச்சுத்துறையில் வேலை.. 71,000 வரை சம்பளம்.. தேதி முடிய போகுது.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: சென்னை அண்ணாசாலையில் அமைந்து இருக்கும் தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலகம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசிதழ்கள் / சிறப்பு வெளியீடுகள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் நடவடிக்கைக் குறிப்புகள், பல்வேறு சட்டமன்ற குழுக்களின் அறிக்கைகள், வரவு செலவு திட்ட ஆவணங்கள்அதிரகசிய பணிகள்,

தேர்தல் படிவங்கள், பதிவேடுகள், கையேடுகள் மற்றும் வாக்குச் சீட்டுகள், தமிழ்நாடு மாநில கணக்காய்வுத் தலைவரின் அறிக்கைகள் உள்ளிட்ட அரசின் பல முக்கிய ஆவணங்கள் இங்குதான் பிரிண்ட் ஆகின்றன. இந்த அச்சு அலுவலக்த்தில் காலியாக உள்ள 24 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் விவரம்: ஜூனியர் மெக்கானிக் (01), ஜூனியர் எலக்ட்ரிஷியன் (01), அஸ்சிஸ்டண்ட் ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் (19), சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் (01). டைம் கீப்பர் (02) என மொத்தம் 24 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புடன் பணியிடங்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ படித்து இருக்க வேண்டும். சிறப்பு மொழி டிடிபி ஆபரேட்டர் பணிக்கு பிசிஏ அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட டிகிரியுடன் டைப் ரைட்டிங் திறனும் அவசியம். டைம் கீப்பர் பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 32 வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன. பிசி, எம்.பி உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகவும் , எஸ்.சி/எஸ்.டி ஆகிய பிரிவினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்: ஜுனியர் மெக்கானிக், எலக்ட்ரிஷியன், ஆஃப்செட் மெஷின் டெக்னிஷியன் ஆகிய பணியிடங்களுக்கு மாதம் ரூ.19,500 - 71,900 - வரை சம்பளம் கிடைக்கும். டிடிபி ஆபரேடர் பணிக்கு ரூ.35,600 - 1,30,800 வரையும் , டைம் கீப்பர் பணிக்கு ரூ.18,200 - 67,100 வரையும் சம்பளமாக கிடைக்கும்.
தேர்வு முறை: எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட்டு சுய விவரங்கள் மற்றும் தேவையான கல்வி தகுதிகளுக்கான சான்றிதழ் நகல் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
எழுதுபொருள் (ம) அச்சுத்துறை ஆணையரகம்
11, அண்ணா சாலை, சென்னை-2
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 31.01.2024 ஆகும் . தேர்வு அறிவிப்பை படிக்க இங்கே http://www.stationeryprinting.tn.gov.in/pdf/B2-21429-2023.pdf கிளிக் செய்யவும். இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பித்து கொள்ளவும்.
-
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலை.. சென்னையில் மார்ச் 28ல் இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க -
IT Jobs: நாளை முதல் 2 நாள் இண்டர்வியூ.. சென்னை HCL நிறுவனத்தில் வேலை ரெடி.. சூப்பர் சான்ஸ் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications