வேலூரில் வேலை.. சமூக நலத்துறை அறிவிப்பு.. 8ஆம் வகுப்பு முடிச்சவங்களுக்கும் ஜாப் இருக்கு.. ரெடியா!
சென்னை: வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசுமருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் என்ற திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்களை பார்க்கலாம்.
தமிழக அரசின் சமூக நலத்துறையின் தரப்பில், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கீழ் "ஒன் ஸ்டாப் சென்டர்" திட்டத்தில் செயல்படுகிறது. சகி-ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசுமருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் என்ற திட்டத்தின் கீழ் 5 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி: வழக்கு பணியிடத்திற்கு சமூக பணி அல்லது உளவியல் பிரிவில் இளங்கலை பட்டம் முடித்து இருக்க வேண்டும். உடல் ஊனமற்றவராக இருத்தல் வேண்டும். ஒரு வருடத்திற்கும் மேலாக முன் அனுபவமும் பெற்றிருத்தல் அவசியம். உள்ளூரில் வசிக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பாதுகாவலர் பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு (பாஸ்/ பெயில்) முடித்து இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும். 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். 24 மணி நேரமும் பணி சுழற்சி முறையில் பணி புரிந்திட விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும். உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம். உள்ளூர் காவல் நிலையத்தில் தடையில்லா (NOC) பெற்று வர வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர்: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு பாஸ் /பெயில். நன்கு சமைக்க தெரிந்த பெண்களாக இருக்க வேண்டும். 24 மணி நேரமும் பணி சுழற்சிமுறையில் பணிபுரிந்திட விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும். உள்ளூர் விண்ணப்பதாரராகவும் மையத்திலேயே தங்க விருப்பம் உள்ளவராகவும் இருத்தல் அவசியம்.
காலிப்பணியிடங்கள்: வழக்கு பணியாளர் I & 2 (Case Worker), பாதுகாவலர் I & 2 (Security) மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multi Purpose Worker) என 5 பணியிடங்கள் நிரப்புவதற்கன அறிவிபு வெளியாகியுள்ளது.
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் https://vellore.nic.in/notice_category/recruitment/ சென்று விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து தேவையான ஆவணங்களுடன் வரும் 17.8.2023 க்குள் சமர்பிக்க வேண்டும்.
அலுவலக முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், பி பிளாக், 4-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், வேலூர் 09
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications