பொதுத்துறை வங்கியில் வேலை.. எக்ஸாம் கிடையாது.. டிகிரி முடிச்சிருக்கீங்களா? தட்டி தூக்குங்க
சென்னை: பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் ஜூனியர் மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்பட மொத்தம் 1,267 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. குறைந்தது மாதம் 48 ஆயிரம் முதல் 1,20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நாட்டில் உள்ள முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் பரோடாவில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது போன்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
வேளாண் சந்தைப்படுத்தல் அதிகாரி - 150
விவசாய சந்தைப்படுத்தல் மேலாளர் - 50
மேலாளர் - விற்பனை - கிரேடு/ஸ்கேல் II - 450
மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் பிரிவு - கிரேடு/ஸ்கேல் II - 78
மூத்த மேலாளர் - கடன் ஆய்வாளர் - தரம்/அளவு III - 46
மூத்த மேலாளர் - MSME உறவு - தரம்/அளவு III - 205
தலைவர் - SME பிரிவு - கிரேடு/ஸ்கேல் IV - 12
என மொத்தம் 61 வகையான பணியிடங்களில் 1267- சிறப்பு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: பணியின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபாடும். துறை சார்ந்த பிரிவில் இளங்கலை/ முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை குறைந்த பட்சம் 24 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பணிக்கு தகுந்தபடி மாறுபாடுகிறது. அதிகபட்சமாக 42 வயது உடையவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் உண்டு.
சம்பளம் எவ்வளவு?: ஜூனியர் மேனேஜர் அளவிலான பணியிடங்களுக்கு மாதம் 48,480 - 85,920/- வரையும், மிடில் லெவல் பணியிடங்களுக்கு மாதம் Rs.85,920 - 1,05,280/-வரையும், சீனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு Rs.1,20,940 - 1,35,020/- வரையும் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையை பொறுத்தவரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு மாதம் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாகவே கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: https://www.bankofbaroda.in/ என்ற இணையதளம் வாயிலாக விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 28.12.2024 ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்; 17.01.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-12/Advertisement-Regular-27-12-2024-26-20.pdf












Click it and Unblock the Notifications