சென்னையில் மத்திய அரசு பணி.. 10 ஆம் வகுப்பு தகுதி போதும்.. கை நிறைய சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: சென்னையில் உள்ள Dakshin Bharat Area- அலுவலகத்தில் காலியாக இருக்கும் 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விவரங்களை பார்க்கலாம்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Dakshin Bharat Area- தென் இந்திய தலைமை அலுவலகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மொத்தம் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

மொத்த காலி பணியிடங்கள்; எல்.டி.சி (01 பணியிடம்), சமையலர் (02 பணியிடம்), எம்.டி.எஸ் (மெசேஞ்சர்) 07 பணியிடங்கள், எம்.டி.எஸ் (தோட்ட பராமரிப்பாளர்) 02 பணியிடம் என மொத்தம் 12 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி என்ன?: எல்.டி.சி பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் தேர்வு வைக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும். இந்திய உனவு வகைகளை சமைக்க தெரிந்து இருக்க வேண்டும். எம்.டி.எஸ் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
சம்பளம் எவ்வளவு: எல்.டி.சி மற்றும் சமையலர் பணியிடத்திற்கு மாதம் ரூ.19,900 சம்பளம் மற்றும் பிற அலவன்ஸ்கள் வழங்கப்படும். எம்.டிஎஸ் பணியிடங்களுக்கு 18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். இந்த பணியிடங்களுகு விண்ணப்பிப்பவர்கள் 18-வயது நிரம்பியவர்களாகவும் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பாணையில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின் படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களின் நகலை அட்டெஸ்ட் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Presiding Officer C/o Officer Commanding Troops, Headquarters Dakshin Bharat Area, Island Grounds, Chennai - 600 009. நேரடியாக வழங்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. தேர்வு அறிவிப்பு வெளியாகி 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வை பொறுத்தவரை சென்னை Island Grounds பகுதியில் நடைபெறும்.












Click it and Unblock the Notifications