ஐஓபி வங்கியில் 400 பணியிடம்! தமிழகத்தில்தான் அதிகம்! 60 ஆயிரம் சம்பளம்! தமிழ் மீடியம்ல படிச்சீங்களா?
சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) லோக்கல் ஆபீசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 260 காலிப்பணியிடங்கள் இருக்கின்ன. சம்பளத்தை பொறுத்தவரை ஆரம்பமே ரூ.60,000 வழங்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு என்ன என்பது உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.
வங்கிகளில் வேலை பார்க்க வேண்டும் என்பது வேலை தேடும் இளைஞர்களின் பெரும் கனவாக இருக்கும். பொதுத்துறை வங்கிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஆரம்பமே பல ஆயிரங்களில் சம்பளம், சலுகைகள், ஊதிய உயர்வு, பதவி உயர்வு , பணி பாதுகாப்பு என சகல வசதிகளும் அரசு விதிமுறைகளின்படி கிடைக்கும் என்பதால் எப்படியாவது வங்கி வேலைக்கு சென்றுவிட வேண்டும் என்ற கனவுடன் படித்து முடித்து பல லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் வங்கி பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதனால் வங்கிகள் வெளியிடும் தேர்வு அறிவிப்பினை தேர்வர்கள் பெரிதும் எதிபார்த்து இருக்கிறார்கள். இந்த நிலையில், நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
லோக்கல் பேங்க் ஆபீசர் பணிக்கு மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
* தமிழ்நாடு - 260
* ஒடிசா - 10
* மகாராஷ்டிரா - 45
* குஜராத் - 30
* மேற்கு வங்கம் - 34
* பஞ்சாப் - 21 என மொத்தம் 400 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந் து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருந்தால் போதும்.
விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் எழுத படிக்க, பேச தெரிந்து இருக்க வேண்டும். அதாவது, தமிழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் நன்கு தெரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடத்திற்கு 20 வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
உள்ளூர் மொழி திறன்
ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மொழித்திறன் தேர்வும் நடைபெறும். எனினும், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ளூர் மொழியில் படித்தவர்கள், அதற்கு ஆவணமாக மார்க் ஷீட் சமர்பித்தால் உள்ளூர் மொழித்திறன் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பணியாள்ர்களுக்கு ரூ.48,480- ரூ.85,920 வரை சம்பளமாக வழங்கப்படும். ஆர்வம் இருக்கும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்த பிறகு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தில், சென்னை, மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, வேலூர், நாமக்கல், ஈரோடு திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சை,கரூர், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஆன்லைன் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது தேர்வு எழுதும் மையங்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வங்கி நிர்வாகம் தேர்வு மையங்களை ஒதுக்கும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் போது தேர்வுக்கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.175 கட்டணம் ஆகும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 12.05.2025 ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.iob.in/upload/CEDocuments/IOB-Recruitment-of-Local-Bank-Officer-2025-26.pdf












Click it and Unblock the Notifications