Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தபால் துறையில் வேலை.. மாதம் 63,200 சம்பளம்.. சென்னையில் பணியிடம்.. தேதி முடிய போகுது! அப்ளை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தபால் துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே கால அவகாசம் உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் கீழ் தபால் துறை இயங்கி வருகிறது. மத்திய அரசு பணி என்பதால் தபால் துறையில் பணியாற்றுபவர்களுக்கு கை நிறைய சம்பளம் + சலுகைகள் உள்ளிட்டவைகள் கிடைக்கும். இதனால் தபால் துறையில் சேர்ந்து பணியாற்ற வேலை தேடும் இளைஞர்கள் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தபால் துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது Skilled Artisans- பிரிவில் காலியாக உள்ள 10 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது.

employment job Postal Department

பணியிடங்கள் விவரம்:
மோட்டார் வாகன மெக்கானிக் - 4 பணியிடங்கள்.
மேட்டார் வாகன எலக்ட்ரிஷியன் - 01
கார்பென்டர் - 01
டயர்மேன் - 01
பிளக்ஸ்மித் - 3 பணியிடங்கள் என மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ படிப்பு முடித்து இருக்க வேண்டும். அல்லது 8-ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் ஓராண்டு பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிக் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஹெவி லைசன்ஸ் வைத்திருப்பது அவசியம்.

வயது வரம்பு & சம்பளம்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் 18-30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும். வயது வரம்பு என்பது 01.07.2024ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். சம்பளத்தை பொருத்தவரை மாதம் ரூ.19,900 to 63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை: தகுதியான விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு போட்டி திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்,டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்ப படிவத்துடன் யுசிஆர் ரிசிப்டில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பங்களை The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai - 600 006 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி ஸ்பீட் போஸ்ட் அல்லது ரிஜிஸ்டர் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப கவரின் மேல்பகுதியில் Application for the post of Skilled Artisan in Trade என எழுதி அதன்பிறகு விண்ணப்பம் செய்யும் பணியின் பெயரை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிய 3 நாள்களே இருப்பதால் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.. விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யவும் தேர்வு அறிவிப்பை படிக்கவும் இந்த லிங்கை கிளிக் செய்து
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_31072024_Skilled_Artisan_English.pdf பார்த்து கொள்ளவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+