எழுத படிக்க தெரிந்தால் போதும்.. தமிழக அரசில் செம ஜாப்.. எக்ஸாம் கிடையாது.. மாதம் 58,000 வரை சம்பளம்
சென்னை: தமிழ் வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள 6 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழ் வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு எதுவும் இன்றி நேரடியாக இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்...

பணியிடங்கள் விவரம்:
அலுவலக உதவியாளர் - 04 பணியிடங்கள்
துப்புரவாளர் - 01
தோட்ட துப்புரவாளர் - 01
கல்வி தகுதி:
அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் பணிக்கு 5 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு:
மேற்சொன்ன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எம்.பி.சி / பி.சி பிரிவினருக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது இந்த பிரிவினர் 34 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு.
சம்பளம்: சம்பளத்தை பொறுத்தவரை அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.15,700- 58,100 வரை கிடைக்கும். துப்புரவாளர் பணிக்கு ரூ.15,700 - 58,100- வரையும், தோட்ட துப்புரவாளர் பணிக்கு ரூ.4,100- 12,500 வரையும் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கு விரும்புவர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். நேரிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம். தமிழ் வளர்சித்துறை இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, அதில் கேட்கப்படுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வரும் 26.07.2024-க்குள் விண்ணப்பிக்க வெண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்,தமிழ்ச்சாலை
எழும்பூர், சென்னை-600008
விண்னப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, கல்வி சான்று, சாதிசான்று, குடும்ப அட்டை/வாக்காளர் அட்டை/ ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து அறிந்துகொள்ளவும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள எந்த மாவட்டத்திலும் நியமனம் செய்யப்படுவார்கள். விண்ணப்ப படிவத்தினை https://tamilvalarchithurai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications