அரசு வங்கியில் வேலை! 85 ஆயிரம் சம்பளம்.. டிகிரி போதும்! உள்ளூரிலேயே வேலை பார்க்க சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூனியன் பேங்க் ஆப் இந்தியா. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் ஊழியர்களுடன் இயங்கி வரும் யூனியன் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் வழியாகவும் நேரடியாகவும் நிரப்பபடுகின்றன.

அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 1,500 உள்ளூர் வங்கி அதிகாரி (லோக்கல் பேங்க் ஆபிசர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள்& கல்வி தகுதி:
லோக்கல் பேங்க் ஆபிசர்- JMGS-I: 1,500 பணியிடங்கள் நிரப்ப படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 200 பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுடவர்கள். உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம்.
அதாவது தமிழகத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் தெரிந்து இருப்பது அவசியம். கேரளாவில் உள்ள பணியிடங்கள் என்றால் மலையாளம் தெரிந்து இருக்க வேண்டும். கேரளாவில் 100 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்பட 10 மாநிலங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
வயது வரம்பு: 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் கீழ் காணும் பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு.
எஸ்.சி/எஸ்.டி - 5 ஆண்டுகள்
இதர பிற்படுத்தப்பட்டவர்கள் (ஒபிசி) - 3 ஆண்டுகள்
பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் - 10 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள் (ஒபிசி) - 13 ஆண்டுகள்
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளமாக கிடைக்கும். ஆர்வமும் தகுதியும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு/ குரூப் டிஸ்கசன் எனப்படும் குழு ஆலோசனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் எண்ணிக்கையை பொறுத்து நேர்முகத்தேர்வு நடைபெறுவது குறித்து முடிவு செய்யப்படும்.
தேர்வு மையங்கள்: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோயில்/ கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் ரூ.175 ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இன்று (24.10.2024) முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வரும் 13.11.2024 கடைசி நாள் ஆகும். தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து அறிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications