ஐடி வேலை.. முன்னணி ஐடி நிறுவனங்கள் தந்த கிரீன் சிக்னல்.. சென்னை மாணவர்களுக்கு குட்நியூஸ்
சென்னை: வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருகையை எதிர்பார்த்து கல்லூரிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பெரிய நிறுவனங்கள் கை நிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், அவர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது.
கல்லூரிகளில் படிக்கும் போதே கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக தேர்வாக வேண்டும் என்பது ஐடி படிக்கும் ஒவ்வொரு மாணவ-மாணவிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கேற்றவாறு தங்களை தயார்படுத்துவதில் மாணவ-மாணவிகள் மும்முரமாக உள்ளனர். இவர்களுக்கான நிறுவனங்களை கல்லூரிகளுக்கு அழைத்து வந்து சிறந்த மாணவ-மாணவிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதில் கல்லூரிகளும் முழு முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். கோடிகளில், லட்சங்களில் சம்பளம் வாங்கும் பலர், கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பெரிய பணிக்கு சென்றவர்கள் ஆவர்.

இதனால் தான் கல்லூரிகளில் படிக்கும் போதே கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக தேர்வாக வேண்டும் என்று மாணவர்கள் அதற்காக நிறைய படிப்பு மற்றும் கடின உழைப்பை கொட்டி வருகிறார்கள். தங்கள் கல்லூரிகளில் ஏற்கனவே படித்து தேர்வான சீனியர் மாணவர்களை போல் வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் பங்கு பெற்று பெரிய நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்துடன் வேலை பெற விரும்புகிறார்கள்
ஆனால் நிலைமை கடந்த 2 ஆண்டுகளாக சரியாக இல்லை. உலக பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை காரணமாக, என்ஜினீயரிங் கல்லூரிகளின் வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ். போன்ற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்காமல் இருக்கின்றன.
நடப்பு கல்வியாண்டிலும் அதே நிலைதான் தொடர்கிறது. அதுமட்டுமல்லாமல் வளாக வேலைவாய்ப்பு நேர்காணலும் இந்த ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் தாமதமாகவே தொடங்கி உள்ளன. இதில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தவிர, மற்ற நிறுவனங்கள் பங்கேற்று குறிப்பிட்ட அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கி உள்ளன.
ஆனால் கல்வியாண்டின் தொடக்கத்தில் கணிக்கப்பட்ட அளவுக்கு வளாக வேலைவாய்ப்பு நேர்காணல் மோசமாக இல்லை . எனினும், முன்னணி நிறுவனங்களின் வருகையை எதிர்நோக்கி கல்லூரிகள் காத்திருக்கும் நிலை தான் இருக்கிறது.
இந்நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான வளாக வேலைவாய்ப்பு நேர்காணலில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு கல்லூரிக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக டி.சி.எஸ். நிறுவனம் அடுத்த மாதத்தில் (ஜனவரி) சில கல்லூரிகளுக்கு சென்று வேலைவாய்ப்பு நேர்காணலில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே பிற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் கல்லூரிகளுக்கு வரத் தொடங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது, அதற்கேற்ற வகையில் மாணவ-மாணவிகளை தனியார் கல்லூரிகள் தயார்ப்படுத்தி வருகின்றன.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications