சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை.. மாதம் 50 ஆயிரம் சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 28 சட்ட உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பார் கவுன்சிலில் அட்வகேட் ஆகவோ அல்லது இந்திய நீதிமன்றங்களில் அட்டார்னியாகவோ பதிவு செய்து இருப்பது அவசியம் ஆகும். மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
நீதிமன்றத்தில் ஏற்படும் பல்வேறு காலிப்பணியிடங்கள் சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம் வாயிலாக நிரப்பப்படுகின்றன. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிட்டு, தேர்வுகள் நடத்தி இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

அதேபோல, தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையிலும் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது 28 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதிகள் வயது வரம்பு உள்ளிட்டவற்றை காணலாம்.
பணியிடங்கள் & கல்வி தகுதி:
சட்ட உதவியாளர் (Research) - 28 பணியிடங்கள்; இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதியைப் பொறுத்தவரை தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து டிகிரி முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் அட்வகேட் ஆகவோ அல்லது இந்திய நீதிமன்றங்களில் அட்டார்னியாகவோ பதிவு செய்து இருப்பது அவசியம்.
படிப்பு காலத்தில் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வர்கள் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் உறுதி செய்து கொள்ள முடியும்.
வயது வரம்பு:
15.12.2025 தேதிப்படி 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.50,000 சம்பளம் கிடைக்கும். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு சம்பளம் மட்டுமே உண்டு.
இதர சலுகைகள் எதுவும் கிடையாது. அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக சட்டப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆராய்ச்சி சட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வர்கள் ஆஃப்லை வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar General,
High Court, Madras,
Pin - 600 104,
என்ற முகவரிக்கு வரும் 15 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப உறையில், "Application for the post of Research Law Assistant to the Hon'ble Judges" என்பதை தெளிவாக குறிபிட்டு அனுப்ப வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.mhc.tn.gov.in/recruitment/docs/Notification_230_2025.pdf
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications