கோவில்பட்டியில் ஐடி வேலை.. பிஇ, பிடெக், பிஎஸ்சி படித்தோருக்கு ஜாக்பாட்.. பணி அனுபவம் வேண்டாம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிஇ, பிடெக், பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்சிஏ படித்தோர் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு பணி அனுபவம் என்பது தேவையில்லை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மித்ராசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Mitrasoft Solutions Private Limited) என்ற ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் வெளியாகி உள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;

மித்ராசாப்ட் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது சாப்ட்வேர் டெவலப்பர்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2022, 2023, 2024ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இசிஇ படிப்பை முடித்தவர்களும், பிஎஸ்சி, எம்எஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தோரும் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் எம்சிஏ படித்தோரும் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணியை விரும்புவோர் [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக தென்மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு பணியில் முன்னுரிமை என்பது வழங்கப்படும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 90924 80924 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவில்பட்டியில் நியமனம் செய்யப்பட உள்ளனர். மேலும் கூடுதல் விபரங்களை www.mitrahsoft.com என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கான அறிவிப்பு வெளியாகி 2 நாட்கள் ஆகிவிட்டது. விண்ணப்பத்திற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முன்னுரிமை என்பதால் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் அதனை சுற்றி வசிப்போர் விண்ணப்பம் செய்யும் பட்சத்தில் ஜாக்பாட் அடிக்கலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications