பொதுத்துறை நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்கள்.. 40,000 சம்பளம்.. டிகிரி முடித்திருந்தால் போதும்
சென்னை: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை இங்கே பார்க்க்லாம்.
நாட்டின் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மத்திய நிதி அமைச்சகத்தின் செயல்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கிளையுடன் இயங்கி வரும் இந்த காப்பீட்டு நிறுவனம் ஒரு பொத்துறை நிறுவனம் என்பதால் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம்+ சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும்.

இந்த நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்பொது நிரப்பபடுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள் விவரம் & கல்வி தகுதி: அசிஸ்டண்ட் - 500 பணியிடங்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் போதும். உள்ளூர் மொழிகளை படிக்க, எழுத, பேச தெரிந்து இருப்பது அவசியம்.
வயது வரம்பு: 01.12.2024 தேதிப்படி 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. அது குறித்த விவரம் வருமாறு:-
எஸ்சி / எஸ்.டி: 5 வருடங்கள்
ஒபிசி: 3 வருடங்கள்
பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள்: 10 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள் (எஸ்சி /எஸ்டி): 15 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள் (ஒபிசி): 13 ஆண்டுகள்
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடத்திற்கு இரு கட்ட எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். இதன் பிறகு பணியாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டும். எஸ்சி /எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.100 செலுத்தினால் போதும். விண்ணப்பிக்கும் பொதே ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 1.1.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.newindia.co.in/
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications