ரெடியா? ஐடிஐ, டிப்ளமோ முடித்தவராக நீங்கள்? நெய்வேலி என்எல்சியில் அசத்தலான வேலை! தேதி முடியப்போகுது
கடலூர்: நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் 2 பிரிவுகளில் காலியாக உள்ள இன்டஸ்ட்ரியல் ட்ரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையின் கட்டுப்பாட்டின் ‛நவ்ரத்னா' நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் கீழ் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி நெய்வேலி என்எல்சியில் இன்டஸ்ட்ரியல் டிரெய்னி பணிக்கு 500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி இன்டஸ்ட்ரியல் டிரெய்னி (Specialised Mining Equipment (SME) Operations) பணிக்கு 238 பேர், இன்டஸ்ட்ரியல் டிரெய்னி (Mines and Mines support Services or MMSS) பணிக்கு 262 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியை பெற விரும்புவோர் பொதுபிரிவினராக இருந்தால் அதிகபட்சமாக 37 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினராக இருந்தால் 40 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினராக இருந்தால் 42 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். எஸ்எம்இ ஆபரேஷன் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிப்ளமோ படிப்பையும், எம்எம்எஸ்எஸ் பணிக்கு ஐடிஐ படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
இது டிரெய்னிங் வகை பணி என்பதால் Stipend முறையில் சம்பளம் வழங்கப்படும். அதன்படி எஸ்எம்இ ஆபரேஷன் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ18 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.22 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படும். அதாவது முதல் ஆண்டு ரூ.18 ஆயிரம், 2ம் ஆண்டு ரூ.20 ஆயிரம், 3ம் ஆண்டு ரூ.22 என வழங்கப்படும்.
அதேபோல் எம்எம்எஸ்எஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.14 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.18 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படும். முதல் ஆண்டு ரூ.14 ஆயிரம், 2வது ஆண்டு ரூ.16 ஆயிரம், 3ம் ஆண்டு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் nlcindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். முதலில் விண்ணப்ப தேதி ஜூலை 8 ம் தேதி வரை மட்டும் வழங்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் நீட்டிப்பு செய்யப்பட்டது. விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு குறித்த அறிவிப்பை காண Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications