மத்திய அரசு வேலைன்னா சும்மாவா? மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம்.. 8 ஆம் வகுப்பு கல்வி தகுதி தான்.. ரெடியா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக உள்ள NMDC- யில் காலியாக உள்ள 995 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். தேர்வு அறிவிப்பு பற்றிய விரிவான விவரங்களை பார்க்கலாம்.

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் எனப்படும் என்.எம்.டி.சி மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தி நிலையமாக உள்ளது. 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது.

nmdc-recruitment-drive-2025-fill-995-field-attendant-roles-don-t-miss-out

சத்தீஸ்கர், கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் சுரங்கங்களில் இருந்து இரும்பு தாது உற்பத்தியை மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 995 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. கள உதவியாளர் (பயிற்சியாளர்) - 151
2. பராமரிப்பு உதவியாளர் (தேர்வு பயிற்சியாளர்) - 141
3. பராமரிப்பு உதவியாளர் (இயந்திரத் துறை பயிற்சியாளர்) - 305
4. பிளாஸ்டர் கிரேடு- II (பயிற்சியாளர்) - 06

5. எலக்ட்ரீஷியன் கிரேடு-III (பயிற்சியாளர்) - 41
6. எலக்ட்ரானிக்ஸ் டெக்னீஷியன் கிரேடு-III (பயிற்சியாளர்)) - 06
7. HEM மெக்கானிக் கிரேடு- III (பயிற்சியாளர்) - 77
8. HEM ஆபரேட்டர் கிரேடு- III (பயிற்சியாளர்) - 228
9. MCO கிரேடு-III (பயிற்சியாளர்) - 36
10. QCA Gr III (பயிற்சி) - 02

என மொத்தம் 995 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி:

பணியிடங்களுக்கு தகுந்தபடி கல்வித் தகுதி மாறுபடும். 8 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கியூசிஏ கிரேடு 2- டிரெய்னி பணியிடத்திற்கு பிஎஸ்சி (வேதியியல்/ புவியியல்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் அவசியம். கல்வி தகுதி குறித்த முழுவிவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் விவரமாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

18-வயது நிரம்பியவர்களும் 30 வயது பூர்த்தி அடையாதவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பணியிடங்களுக்கு 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம்:

சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.18,100 முதல் 35,040 வரை வழங்கப்படும். தேர்வு முறையை எடுத்துக்கொண்டால் கணிணி வழியிலான தேர்வு மற்றும் உடல் தகுதி / தொழில் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும். சென்னையிலேயே தேர்வுகள் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை ஒருமூறை படித்து தெரிந்து கொண்ட பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எஸ்டி / எஸ்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. பிற தேர்வர்களுக்கு ரு.150 கட்டணம் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 14.06.2025 கடைசி நாள் ஆகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.nmdc.co.in/cms-admin/Upload/Career_Documents/181f051f3914465da3e336d56f95d7f6_20250522214441616.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+